பக்கம்:தம்பியின் திறமை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18


அரசனுடைய பையனையே தூக்கிக் கொண்டு வந்து விட்டான்.

லோகநாதன் குகையிலே கைதியைப் போல வாழ வேண்டியதாயிற்று. அவனைச் செல்லமுக்தாவது பக்காத் திருடனுவது சதா காவல் புரிந்து கொண்டிருந்தார்கள். அவர் கள் இரண்டுபேரும் வெளியில் போளுலோ அல்லது தூங்கி ஞலோ லோகநாதனை ஒரு குகைக்குள் அடைத்து வைத்து விடுவார்கள்.

இவ்வாறு பல வருஷங்கள் சென்றன. லோகநாதனுக்கும், செல்லமுத்துவுக்கும் இருபது வயதாயிற்று. அப்பொழுது அவர்கள் இருவரும் சேர்ந்து திருட்டுக்குப் போகவேண்டும் என்று பக்காத்திருடன் சொன்னன். லோகநாதன் தன் உயிர் போவதாக இருந்தாலும் திருட்டுக்குப் போகமுடியாது என்று கண்டிப்பாகப் பேசினன். அவனை அடித்தார்கள். அப்பொழு தும் அவன் இணங்கவில்லை. அதனுல் செல்லமுத்து மட்டும் கொள்ளையடிக்கப் போனன்.

அவன் குகைக்குத் திரும்பி வரும்போது நாகபுரிக் காவ லாளிகள் பார்ததுக் கொண்டார்கள். அவன் போன வழியை நன்கு தெரிந்துகொண்டு அவர்கள் பட்டனத்துக்குப் போய் அரண்மனையில் விஷயத்தைச் சொன்னர்கள்.

அந்தச் சமயத்திலே நாகபுரியில் அரசன் யாரும் இல்லை. அரசனும் அரசியும் வயதாகி இறந்துவிட்டார்கள். லோக நாதனைக் கண்டுபிடிக்க முடியாத கவலையோடு அவர்கள் இறந்ததால் மந்திரிகள் லோகநாதனை எப்படியாவது தேடிப் பார்க்க வேண்டுமென்று முயற்சி செய்தார்கள்.

அவர்கள் பக்காத்திருடனுடைய இருப்பிடத்தைப் பற்றிச் சேதி அறிந்ததும் அந்த இடத்தை நோக்கிப் பல வீரர் களுடனே வந்தார்கள்.

அவர்கள் வரும் சமயத்தில் லோகநாதனும் செல்லமுத்து வும் மலைக் குகைக்குச் சற்று தூரத்திலே காட்டுக்குள் மல்யுத்தம் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். லோகநாதனுக்கு ஈடாக செல்லமுத்து மல்யுத்தம் செய்ய முடியாது. அதனல்