பக்கம்:தம்பியின் திறமை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


லோகநாதன் அவனைச் சுலபமாகக் கீழே வீழ்த்தி நிலத்தோடு அழுத்தினுன். அவன்மேலே ஏறி உட்கார்ந்தான்.

அந்த வேளையிலே மந்திரிகளும் படைவீரர்களும் அங்கு ೧ಿ (?·r+ ' + ' +FA در ماه مارس سهمیه பசர் தத் தான் வந்த விஷயத்தைச் சொல்லியதோடு அவனை யாரென்று அறிந்துகொள்ள விரும்பினன்.

'நான்தான் ராஜகுமாரன். என் பெயர் லோகநாதன்' என்று அவன் சொன்னன்.

அவன் சொல்லி வாய் மூடுவதற்கு முன்பு செல்லமுத்து முதன் மந்திரியைப் பார்த்து, "இவன் பொய் சொல்லுகிருன். இவன் ராஜகுமாரனல்ல. நான் தான் ராஜகுமாரன்' என்று பொய் சொன்னன்.

முதன் மந்திரிக்கு யார் சொன்னது உண்மை என்று தெரியவில்லை. அதளுல் கொஞ்சம் யோசனை செய்து கொண் டிருந்தான்.

அதைக்கண்டு செல்லமுத்து, “உங்களுக்கு இன்னும் சந்தேகமா? நீங்கள் வரும்போது இவன் என் மேலே ஏறிக் கொண்டு என்னை நிலத்தில் அழுத்தியதை நீங்கள் பார்க்க வில்லையா? சிறைக்கைதியாகக் கிடக்கும் ராஜகுமாரனுகிய நான் அந்தப் பக்காத்திருடனின் மகன்மேல் ஏறி உட்கார அவன் சம்மதிப்பான? நீங்களே யோசித்துப் பாருங்கள். அதற்கு மேலும் உங்களுக்குச் சந்தேக மிருக்குமானுல் வாருங்கள். நான் உங்களுக்கு அந்தப் பக்காத்திருடனைக் காட்டிக் கொடுக் கிறேன். அவன்தான் என்னை இதுவரை இங்கு கைதியாக வைத்திருக்கிறவன்' என்று சந்தேகத்துக் கிடமில்லாமல் மன மள வென்று பேசிஞன்.

மந்திரிகளும் படைவீரர்களும் செல்லமுத்துவைப் பின் தெரடர்ந்து சென்ருர்கள்.

செல்லமுத்து பக்காத்திருடனுகிய தன் தந்தையைக் காட்டி ன்ை. இவன் தான் பக்காத்திருடன். இவனைப் பிடித்து விலங்கு போடுங்கள்' என்று அதிகாரத்தோடு சொன்ஞன். உடனே வீரர்கள் திருடனைக் கைது செய்தார்கள்.