பக்கம்:தம்பியின் திறமை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


மேல் சந்தேகம் வந்துவிட்டது. இவர்களெல்லாம் கலியானப் பேச்சுப் பேசுவது போல வந்து இந்த நாட்டு ரகசியங்களைத் தெரிந்து கொண்டுபோக வந்திருக்கிருர்கள். நமது பட்டணத் தின்மேல் படையெடுக்கத்தான் இந்த ஏற்பாடு செய்திருக் கிருர்கள்' என்று நினைத்தான்.

உடனே தனது சேனைகளைத் திரட்டிக்கொண்டு சந்திரபுரி அரசன்மேல் சண்டைக்குப் புறப்பட்டான். சேனதிபதி எவ் வளவு சொல்லியும் அவன் பேச்சைக் கேட்கவில்லை. சேனுதி பதியும் பகைவர்களோடு சே தருககிருன். அதனுல்தான் போர் வேண்டாமென்கிருன்' என்று சந்தேகித்து அவனைச் சிறையில் போடும்படி உத்தரவிட்டுத் தானே படைத்தலை வகைப் போருக்கு புறப்பட்டான்.

நாகபுரி வீரர்கள் மனமில்லாமல் போர் செய்தார்கள். அத்துடன் செல்லமுத்துவுக்குப் போரை நடத்தத் தெரிய வில்லை. அதனுல் அவன் தோல்வியடைந்து போர்க்களத்தை விட்டு ஒட்டமெடுத்தான். அந்தச் சமயத்தில் ஓர் அம்பு முதுகில் படவே அப்படியே விழுந்து உயிர்விட்டான்.

உயிர் விடும் தருணத்தில்தான் அவனுக்குத் தான் செய்த தவறெல்லாம் நினைவுக்கு வந்தது. பொய் பேசி ஒரு சுகமும் அடையவில்லையே என்றும் விசனப்பட்டான். அதனுல் அவன் உயிர் விடுவதற்கு முன்பு பக்கத்திலிருந்த வீரர்களைக் கூப்பிட்டு பாதாளச் சிறையில் இருப்பவனே உண்மையான ராஜகுமார னென்று சொல்லிவிட்டான்.

லோகநாதனைச் சிறையிலிருந்து அழைத்து வந்து நாக புரியின் அரசனுக்கினர்கள். சந்திரபுரி அரசனும் உண்மையை அறிந்து மகிழ்ச்சியடைந்து தன் மகளை அவனுக்கு மணம் செய்து கொடுத்தான். லோகநாதன் தன் குடிகளை அன்போடு நெடுங்காலம் ஆண்டுவந்தான்.