பக்கம்:தம்பியின் திறமை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


இல்லாதவருக்குக் கலப்பை வரைந்து கொடுப்பான். இப்படி யாக யாருக்கு எது தேவையென்று தெரிகிறதோ அதையெல் லாம் தனது மந்திரத்துரிகையின் சக்தியால் உண்டாக்கிக் கொடுத்தான். ஏழைகளெல்லாம் அவனை மனமார வாழ்த்தினர் கள். மாலியாங் இவ்வாறு உதவி செய்யும் செய்தி ஊர் முழு வதும் விரைவில் பரவிற்று.

அந்த ஊரிலே ஒரு பணக்காான் இருந்தாள். அவன் பேராசைக்காரன். அவன் மாலியாங்கின் ம ந்திரத்து: Ꮠ1ᏜyᏓl ! அபகரித்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தான். உடனே அவன் மாலியாங்கைத் தன்னிடம் வருமாறு ஓர் ஆளிடம் சொல்லியதுப்பிளுள்,

மாலியாங் வந்தவுடன், டேய், எங்கே அந்த மந்திரத் தூரிகை? அதை என்னிடம் கொடு" என்று அதிகார தோர ணையில் கேட்டான். மாலியர்ங் ஏழையாக இருந்தாலும் பயப் படவில்லை. தூரிகையைக் கொடுக்க முடியாது என்று நிதான மாகப் பதில் சொன்னுன்.

பணக்காரனுக்கு மூக்கிற்குமேல் கோபம் வந்தது. அவன் மாலியாங்கை இருட்டான ஒரு அறைக்குள் தள்ளிக் கதவைப் பூட்டிவைத்தான். பட்டினி கிடந்து மாலியாங் வாடவேண்டும் என்பது அவனுடைய எண்ணம்.

அதனுல் அவன் மூன்று நாட்கள் வரையில் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவேயில்லை. நான்காம் நாள் அவன் மெதுவாக வந்தான். அறையின் கதவு இடுக்கிலே உள்ளே பார்த்தான். அவன் எதிர்பார்த்ததுபோல மாலியாங் சோர்ந்து கிடக்கவில்லை. மாலியாங் ஒரு பட்டு மெத்தையிலே ஒய்யாரமாகப் படுத்திருந் தான். விளக்கு ஒன்று பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது. பக்கத்திலே நான்கு தட்டுகளிலே ஆப்பிள், ஆரஞ்சு முதலான பழங்களும் வெவ்வேறுவிதமான பலகாரங்களும் குவிந் திருந்தன. மாலியாங் ஒரு ஆப்பிளேக் கையிலெடுத்து வாயிலே கொஞ்சங் கொஞ்சமாகக் கடித்துச் சுவைத்துக்கொண்டிருந் தான். வானம்பாடி ஒன்று அறைக்குள்ளே பறந்துகொண்டே பாடிக்கொண்டிருந்தது.