பக்கம்:தம்பியின் திறமை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

வில்லும் அம்புமாக மாறின. அவன் வில்லை யெடுத்து அம்பைத் தொடுத்துக் குறி பார்த்துப் பணக்காரன் மேல் விட்டான். அம்பு குறி தவறவில்லை. பணக்காரனுடைய மார்பிலே அது பாய்ந்தது. பணக்காரன் தரையிலே விழுந்து புரண்டான்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மாலியாங்கிற்கு அந்த ஊரி லேயே இருக்கப் பிடிக்கவில்லை. அவன் ஊர் ஊராகச் சென்று பலருக்கும் உதவி செய்தான். கடைசியில் ஒரு பட்டணத்திற் குப் போய்ச் சேர்ந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு கொடுங் கோலன் அரசு செய்து வந்தான். அவன் செய்கின்ற கொடு மையால் மக்கள் மிகவும் துன்பப்பட்டார்கள். அந்த அரசன் எப்பொழுது ஒழிவாளுே என்று அவர்கள் எண்ணிக்கொண் டிருந்தார்கள். ஆனல் அதை வெளியில் யாரும் சொல்லவில்லை. அரசனிடத்திலே அவர்களுக்கு அவ்வளவு பயம்.

கொடுங்கோலனுக்கு மாலியாங்கைப் பற்றியும் அவனுடைய மந்திரத்துரிகையைப் பற்றியும் தெரிந்தது. மந்திரத்துரிகையை அவனிடமிருந்து கவர்ந்துகொள்ள உடனே அவன் திட்ட மிட்டான். மாலியாங்கைத் தனது சபையிலே வரும்படி கட்டளை யிட்டான். சபையின் நடுவிலே இரும்புக்கம்பிகளால் ஒரு கூடாரம் அமைக்கச் சொன்னன். மந்திரிகளுக்கும் பிரதானி களுக்கும் எதற்காக அக்கூடாரம் என்று முதலில் விளங்கவில்லை. சிங்கம் புலிகளை அதற்குள் அரசன் விடச் சொல்லுவானே என்று அவர்கள் பயந்தார்கள். இருந்தாலும் அரசனிடம் அதைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள அஞ்சினர்கள். அரசன் உத்திரவுப்படியே பலமான இரும்புக் கூடாரம் அமைத் தார்கள்.

மாலியாங் அரச சபையில் வந்து சேர்ந்தான். அரசன் முதலில் அவனை மிகவும் புகழ்ந்து பேசினன். "உனது திற மையைக் கண்டு களிக்க எனக்கு அடங்காத ஆசை உண்டா கிறது. இந்த இரும்புக் கூடாரத்திற்குள்ளே அமர்ந்து நீ உனது திறமையைக் காண்பிக்கவேண்டும்” என்று அரசன் மெதுவாகத் தன் கருத்தை வெளியிட்டான். கூடாரத்திற் குள்ளிருந்து கொண்டு ஒரு புலி வரைய வேண்டுமாம். இது அரச னுடைய விருப்பம். அரசனுடைய சூழ்ச்சி மாலியாங்கிற்கு