பக்கம்:தம்பியின் திறமை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@pతలకొ

இமய மலையின் வடபகுதியிலே பனி மலைகள் சூழ்ந்துள்ள ஒரு தேசம் இருக்கிறது. அதன் பெயர் திபெத்து. அங்கே யாலூங் என்ற ஒரு ஆறு உண்டு. அந்த ஆற்றின் கரையிலே முச்சி என்ற பெயர் உள்ள ஒரு இளைஞன் தன் தாயா ரோடு வசித்துவந்தான்.

முச்சீ மிகவும் ஏழை. அவனுக்குச் சொந்தமான திலம் கிடையாது. அவன் குத்தகைக்குக் கொஞ்சம் நிலம் வாங்கி அதை மிகவும் சிரமப்பட்டு உழுது வாழ்க்கை நடத்தி வந்தான். அவனுடைய தாயாரும் காலையிலிருந்து பொழுது சாயும் வரை யில் நிலத்தில் வேலை செய்தாள். அதனுல் நிலம் நன்ருக விளைந்தது.

இதைக் கண்டு நிலத்தின் சொந்தக்காரனுக்குப் பொருமை உண்டாயிற்று. அவன் தன் சொந்தப் பண்ணையிலே நிறைய ஆள் வைத்து விவசாயம் நடத்தின்ை. அதில் அவ்வளவு நன்ருக விளைச்சல் உண்டாகவில்லை. அதனுல் அவனுக்கு முச்சீ யிடம் பொருமை ஏற்பட்டது. முச்சீயிடம் இரண்டு திபெத்து நாட்டு யாக் எருதுகள் இருந்தன. அவற்றை எப்படியாவது கவர்ந்துகொள்ளவேண்டுமென்று திலச்சொந்தக்காரனுக்கு உள் ளுக்குள்ளே ஆசை.

அவனுடைய பெயர் காளிகங்கன். அவனுக்கு நிலம் ஏராளமாக உண்டு. பணமும் நிறைய உண்டு. அதனுல் அவனைக் கண்டால் எல்லோரும் பயப்படுவார்கள்.

காளிகங்கன் ஒரு நாள் குதிரைமேல் ஏறிக்கொண்டு கங்க திங்கம் என்ற ஊருக்கு புறப்பட்டான். அப்படிப் போகும் பொழுது முச்சீ மண்வெட்டியால் நிலத்தை வெட்டிக் கொண் டிருப்பதைக் கண்டான். உடனே அவன் முச்சியின் எருதுகளைக்