பக்கம்:தம்பியின் திறமை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


கைப்பற்ற ஒரு தந்திரம் கண்டு பிடிக்கலானுன். அவன் முச்சீ யைப் பக்கத்தில் வருமாறு கூப்பிட்டான்.

  • நான் கங்கதிங்கம் போய்விட்டு ஒரு வாரத்தில் வருவேன். அதுவரையிலும் நீ மண்வெட்டியைக் கொண்டு நிலத்தை எத்தனை தடவை வெட்டினுய் என்பதைக் கணக்கு வைத்து எனக்குச் சொல்லவேண்டும். கணக்குத் தவறினுல் உன் எருது களை எனக்குக் கொடுத்துவிடவேண்டும்' என்று கூறிவிட்டுக் அவன் நின்று கூடப் பார்க்காமல் போய்விட்டான்.

முச்சீக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. அவன் மண்வெட்டியை ஓங்கும்போதெல்லாம் ஒரு சிறு கல்லைத் தன் சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டான். ஆளுல் இப்படிச் செய்துகொண்டே அதிக நேரம் வேலை செய்ய முடியவில்லை. சட்டைப்பையில் உள்ள கற்கள் பெரிய பாரமாக ஆகிவிட்டன. மண்வெட்டியால் நிலத்தை வெட்டும் பொழுது அவை கீழே சிதறி விழவும் தொடங்கின. அதனுல் கணக்கும் தவறலாயிற்று. வேலையும் வழக்கம் போல் நடக்கவில்லை. முச்சீ இவ்வாறு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்த அவன் தாயா ருக்கு அழுகை வந்துவிட்டது. " காளிகங்கன் எருதுகளைப் பிடித்துக்கொள்வானே, இனிமேல் நாம் எப்படி நிலத்தை உழுது சீவனம் செய்வோம்' என்று கூறிக் கொண்டே அவள் ஓலமிட்டுப் புலம்பினுள்.

"அம்மா, நீ வருத்தப்படவேண்டாம். ஆறு வற்றிப் போனுலும் மலை யுச்சியிலே பனிக்கட்டி