பக்கம்:தம்பியின் திறமை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


காளிகங்கன் திகைத்துப்போனன். இப்படிப்பட்ட பதிலே அவன் எதிர்பார்க்கவே இல்லை. அதனல் அவன் தேள் கெசட் டிய திருடன்போல மெளனமாகத் தன் வீட்டுக்குத் திரும்பிப் போன்ை. இருந்தாலும் அவனுக்கு எரு துகளைக் கவர்ந்து கொள்ள வேண்டு மென்ற ஆசை மறையவில்லை. அதற்கு அவன் நல்ல சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.

சில நாட்களுக்குப் பிறகு காளிகங்கன் மறுபடியும் கங்கதிங் கத்திற்குப் புறப்பட்டான். அவன் குதிரையில் சவாரி செய்யும் போது முச்சீயும் அவன் தாயாரும் நிலத்திலே கல் பொறுக்கிக் குவியலாகப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

  • டேய், முச்சீ, நான் கங்கதிங்கத்திலிருந்து திரும்பி வந்தவுடன் நீ எனக்குக் கல்லிலே நூல் எடுத்து ஒரு கைக் குட்டை செய்து கொடுக்க வேண்டும். இப்பொழுதே வேலை தொடங்கு இல்லாவிட்டால் உன் எருதுகளைப் பிடித்துக் கொண்டு போய்விடுவேன்' என்று உரத்த குரலில் கூறிவிட்டு வேகமாகப் போய்விட்டான்.

கல்லிலே எப்படி நூல் உண்டாக்க முடியும்? இப்படிச்செய்ய முடியாத காரியத்தைச் செய்யச் சொல்லிப் பண்ணைக்காரன் உத் தரவிட்டுப் போனதை நினைத்துத் தாயார் தேம்பினுள். அவள் கண்களில் நீர் தாரைதாரையாக வழிந்தது. எருதுகள் போய் விடுமே என்று விம்மினுள்.

முச்சீ அவளுக்குத்தேறுதல் சொல்லிவிட்டுப்புறப்பட்டான். மறுபடியும் அண்டை வீட்டுக்காரர்களுடைய ஆலோசனையை நாடினன். பிறகு கவலையேதும் இல்லாமல் காளிகங்கனுடைய வருகையை எதிர்பார்த்திருந்தான்.

காளிகங்கன் பத்து நாட்களில் திரும்பினன். ' எங்கே கைக்குட்டை ? ' என்று அதிகாரத்தோடு முச்சீயைக் கேட்டான். இந்தத் தடவை எருதுகள் தனக்குக் கிடைத்துவிடும் என்று அவனுக்கு உள்ளுக்குள்ளே குதூகலம்.

" கைக்குட்டை தயாராகிவிட்டது. ஆனல்அதில் பூவேலை செய்ய வில்லை. உங்களைப் போன்ற பணக்காரர்கள் பூவேலையில் லாத கைக்குட்டையை வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதனல்