பக்கம்:தம்பியின் திறமை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தம்பியின் திறமை


அண்ணன் தம்பிகள் ஐந்து பேர் தங்கள் தாயோடு ஒர் ஊரிலே வசித்து வந்தார்கள். அவர்களுடைய தந்தை இறந்து போய்ப் பத்தாண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. தாய்தான் அவர்களைக் காப்பாற்றி வளர்த்து இளைஞர்களாகச் செய்தாள்.

அந்தத் தாய்க்கு எல்லாக் குழந்தைகளிடத்திலும் அன்பு தான். ஆனால் நல்லமுத்து என்னும் கடைசிப் பையனுக்கு அவள் அதிகமான உரிமை கொடுத்திருந்தாள். அவன் செல்லப்பிள்ளை. அதைக் கண்டு மற்ற நால்வருக்கும் அவனிடத்திலே பொறாமை. அவர்கள் எப்பொழுதும் நல்லமுத்துவைப் பழித்துப் பேசுவார்கள்.

"அம்மா, நீ நல்லமுத்துவைப் பற்றிப் பிரமாதமாக நினைத்துக் கொண்டிருக்கிரறாய். அவன் மண்டையிலே களிமண்கூடக் கிடையாது" என்று ஆரம்பிப்பான் எல்லோருக்கும் மூத்தவனான சாமிநாதன். அண்ணன் சொல்லுவது முற்றிலும் உண்மை என்று ஒத்துப்பாடுவார்கள் மாணிக்கம், சுந்தரம், வேலுச்சாமி ஆகிய மூவரும்.

"நல்லமுத்துக்கு மூளையில்லை என்று சொல்லுகிற உங்களுக்குத்தான் மூளையில்லை' என்று சில சமயங்களில் சற்று கோபமாகவே தாய் பதில் சொல்லுவாள். அவர்கள் நல்லமுத்துவைப்பற்றி இழிவாகப் பேசுவதைக் கேட்டுக் கேட்டு அலுத்துப்போய் அவளுக்கு அப்படிக் கோபம் வருவதுண்டு.

தாய்க்குக் கோபம் வரவர மூத்தவர்களுக்குக் கடைசித் தம்பியிடம் வெறுப்புத்தான் அதிகமாயிற்று. அதைக் கண்டு தாயார் மனம் வருந்தினாள். நல்லமுத்து எல்லோரையும்விடப்