பக்கம்:தம்பியின் திறமை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


இருந்தது. வீடு முழுவதும் அரிசி குவிந்துவிட்டது. அப் பொழுதும் சுரைக்காயில் அரிசி குறையவில்லை. கீழே கொட்டக் கொட்ட நிறைந்துக்கொண்டே இருந்தது.

இந்தாப்பாட்டி அரிசியை எல்லோருக்கும் வாரி வாரிக் கொடுத்தாள். எல்லோருக்கும் நல்ல உணவு கிடைத்தது. எல்லோரும் அவளை வாழ்த்தினர்கள். இல்லைப்பாட்டிக்கு இந்த விஷயம் தெரிந்தது. அவள் எப்படியோ தந்திரமாகப் பேசி இந்தாப்பாட்டிக்கு ஏராளமாக அரிசி கிடைக்கின்ற இரகசியத் தைத் தெரிந்துகொண்டாள். தானும் அவ்வாறு சிட்டுக் குருவிக்கு உதவி செய்து சுரை விதை பெறவேண்டும் என்று தீர்மானித்தாள்.

அதுமுதல் அவள் தினந்தோறும் தன் வீட்டுக்கு முன்னல் நின்று பார்த்துக் கொண்டிருப்பாள். தினமும் பல சிட்டுக் குருவிகள் அங்கே உட்கார்ந்து இரை தேடிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்கும். சிறுவர்கள் தெருவிலே ஒடி ஆடி விளையாடுவார்கள். சில சமயங்களிலே குருவிகளின் மீது கல்லை வீசுவார்கள். ஆளுல் ஒரு கல்லும் அவைகளைக் காயப் படுத்தவில்லை.

இல்லைப்பாட்டிக்கு ரொம்பக் கோபம். ஒரு பையனுவது சரியாகக் குறிபார்த்து அடிக்கவில்லையே என்று அவர்களை வைதாள். கடைசியில் அவளே குருவிகளின் மீது கல்லை வீச ஆரம்பித்தாள். எப்படியோ ஒரு கல் ஒரு சிட்டுக்குருவியின் முதுகில் பட்டு அதன் இறகு ஒடிந்துவிட்டது. இல்லைப் பாட்டிக்கு ஒரே ஆனந்தம். குருவி துடித்துக் கொண்டு தரை யிலே கிடந்தது.

அவள் அந்தக் குருவியை வீட்டுக்குள் எடுத்துச் சென்ருள். ஒடிந்த இறகுக்கு மருந்து போட்டாள். குருவிக்கு இரையும் வைத்தாள.

கொஞ்ச நாளில் காயம் ஆறிற்று. குருவி பறந்தோடி விட்டது. சில நாட்களுக்குப் பிறகு அந்தக் குருவியும் ஒரு சுரை விதையைக் கொண்டுவந்து இல்லைப் பாட்டியின் முன்னுல் போட்டது. கிழவி மகிழ்ச்சியோடு அந்த விதையை எடுத்து வீட்டுக் கொல்லேயில் போட்டுத் தண்ணிர் ஊற்றினுள்.