பக்கம்:தம்பியின் திறமை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


மேலே அனுப்பு. பிறகு இரண்டாம் முறையாக நான் பையை உள்ளே விடும்போது நீ அதிலேறிக் தொண்டு வந்துவிடலாம். கிடைக்கும் பணத்தை இரண்டு பேருமாகப் பங்கிட்டுக் கொள் வோம்' என்று கூறிஞன் எத்தன்.

“எனக்கு இரண்டணு அதிகமாகப் பங்கிடவேணும், உருளைக்கிழங்கு விலை அதிகம்' என்று வாதாடினன் தசுக்கன். வெகுநேரம் இதைப்பற்றி அவர்களுக்குள் விவாதம் நடந்தது. கடைசியில் எத்தன் இணங்கினன். தசுக்கனைக் கோணிப்பை யில் கட்டிப் பாழுங் கிணற்றுக்குள் விட்டான்.

கிணற்றின் அடியில் சென்றதும் தசுக்கன் பைக்குள் இருந்த படியே ஒரு காலை எடுத்து மெதுவாகக் கீழே வைத்தான். சப்பாத்திக்கள்ளி முள் நறுக்கென்று காலில் குத்தியது. அவன் நன்ருக உற்றுப் பார்த்தான். ஒரே இருட்டாக இருந்தபடியால் ஒன்றுமே தெரியவில்லை. பிறகு மெதுவாக மற்ருெருகாலை எடுத்து வைத்தான். அந்தக் காலிலும் முள் நன்ருகக் குத்திற்று. அதல்ை அவனுக்கு எத்தன் மேல் சந்தேகம் வந்துவிட்டது. தன்னை ஏமாற்றிக் கிணற்றுக்குள்ளேயே விட்டு விட்டுப்போக எத்தன் தந்திரம் செய்திருக்கிருன் என்று அவனுக்குத் தோன் றிற்று. அதனல் அவனும் ஒரு சூழ்ச்சி செய்ய நினைத்தான். அ வ ன் கோணிப்பைக்குள் உட்கார்ந்துகொண்டே, "அண்ணு, தங்கம் கட்டி கட்டியாக ஏராளமாகக் கிடக்கிறது!" என்று சத்தமாகக் சொன்னன்.

'தம்பி, சத்தம் போடாதே; முதலில் தங்கக்கட்டிகளை யேல் லாம் கோணிப்பைக்குள் போட்டு அனுப்பு. ஒரு கட்டியையும் விட்டுவிடாதே" என்று எத்தன் பதில் சொன்னன்.

கிணற்றுக்குள் தங்கம் இருக்குமென்று அவன் முதலில் நினைக்கவில்லை. தசுக்கனை ஏமாற்றவே அவனைக் கிணற்றில் கட்டிவிட்டான். ஆனல் இப்பொழுது தசுக்கன் கூறியதைக் கேட்டதும் தங்கத்தின் மீதிருந்த ஆசையால் அவன் அதை உண்மையென்றே நம்பிவிட்டான்.

தசுக்கன் பைக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, 'அண்ணு, தங்கக் கட்டியெல்லாம் பையில் கட்டியாகி விட்டது, மேலே இழு'என்ருன். எத்தன் ஆவலோடு