பக்கம்:தம்பியின் திறமை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

等9

கொஞ்ச நேரத்திலே அவர் மலையுச்சிக்குத் திரும்பி வந்தார். பையா, நீ விரும்புகிறதைப்போல் நிலாவால் பிரகாசிக்க முடியா தாம். அதற்குச் சூரியனைப்போல அவ்வளவு சக்தி இல்லையாம். எல்லா இரவிலுங்கூட ஒரேமாதிரியாகப் பிரகாசிக்க முடியாதாம். சில இரவுகளில் சமுத்திரத்திற்குப்போய் முகத்தை நன்ருகக் கழுவி, சுத்தம் செய்துகொள்ளவேண்டுமாம். இல்லாவிட்டால் அழுக்குப்படிந்து இப்பொழுதுள்ள ஒளியும் மங்கிப்போகுமாம்" என்று அவர் சொன்னர்.

பையனுடைய முகத்திலே விசனம் படர்ந்தது. "ஐயா, நீங்கள்தான் உலகத்து மக்களுடைய துன்பத்தைப்போக்க ஒரு வழி சொல்லவேண்டும். இரவிலே அவர்களுக்கு நல்ல வெளிச் சம் கிடைக்கவேண்டும்” என்று கெஞ்சிக்கெஞ்சிக் கேட்டான். மகான் சற்று நேரம் யோசனை செய்துவிட்டு, மக்களுக்கு இரவில் ஒளி கிடைக்கவேண்டுமானல் அதற்கு எண்ணெய் தரும் செடியைப் புதிதாக உலகத்திலே உண்டாக்கவேண்டும். யாராவது ஒரு மனிதன் அவ்விதச் செடியாக மாறுவதற்குத் தயாராக இருந்தால் அந்தச் செடியை உண்டாக்க முடியும். தன்னையே தியாகம் செய்துகொள்ளும் மனிதன் எவனுவது இருக்கிருளு?' என்ருர் அந்த மகான்.

உடனே, "நானே தயாராக இருக்கிறேன். என் வாழ்வு பெரிதல்ல. மக்களுடைய துன்பம் நீங்கினல் போதும்' என்று ஆர்வத்தோடு பையன் பதில் சொன்னன். பையனுடைய ஆர்வத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்த மகான் அவனிடம் ஒரு முத்தைக் கொடுத்தார். "இந்த முத்தை வாயில் போட்டு விழுங் கிளுல் நீ எண்ணெய்வித்துச் செடியாக மாறிவிடுவாய்' என்ருர் மகான். பையன் கொஞ்சமும் தயக்க மின்றி அந்த முத்தை வாயில் போட்டு விழுங்கினன்.

உடனே அவன் ஆமணக்குச் செடியாக மாறிப் பூத்துக் காய்த்துக் குலுங்கினன்.

வீட்டை விட்டு இப்பையன் புறப்பட்டுவந்து பத்து மாதங் களாயின. அதனல் கிழவனும் அவன் மகளும், "என்ன ஆயிற்ருே?" என்று கவலையில் மூழ்கினர்கள். ஒரு நாள் மகள் தன் தந்தையைப் பார்த்து, "அப்பா! நான் அந்த வெள்ளிப்