பக்கம்:தம்பியின் திறமை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

யைச் சொல்லப் போனான். அவன் சொல்லும் கதையை யாராலும் மெய்யென்று நம்ப முடியாது. ஏனென்றால் அவன் சொல்லுவதுபோல் வாழ்க்கையிலே நடக்கவே முடியாது. அதனால்ல் பொற்கொடி தனக்கே மனைவியாகப் போகிறாள் என்று அவன் நிச்சயமாக நம்பினான். பொற்கொடியிடம் அவன் உற்சாகத்தோடு கீழ்க்கண்டவாறு தனது வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லலானான்.

"எனக்குப் பதினைந்து வயதாக இருந்தபொழுது ஒரு நாள் நான் ஒரு கப்பலில் ஏறி மீன் பிடிப்பதற்காகக் கடலில் நெடுந்துரம் சென்றேன். என்னுடன் வந்த வேலைக்காரர்கள் கடலில் பெரிய பெரிய வலைகளை வீசினார்கள். ஆனால் அன்று ஒரு மீன்கூட அகப்படவில்லை. எல்லோருக்கும் இது ஆச்சரியத்தை உண்டாக்கிற்று. கடலிலிருந்து மீன் கிடைக்காத நாளே கிடையாது. அப்படியிருக்க அன்றுமட்டும் ஒரு சிறு மீன்கூட அகப்படாதது எல்லோரையும் திகைக்க வைத்தது. அப்படி மீன் கிடைக்காத காரணத்தை ஆராய வேண்டுமென்று நான் கடலுக்குள் குதித்தேன். குதித்து வேகமாக உள்ளே மூழ்கினேன். ஐந்து மைல் ஆழம் உள்ளே போகும் வரையிலும் கண்ணுக்கு ஒரு பிராணிகூடத் தென்படவில்லை. அதுவும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. நான் மேலும் மேலும் மூழ்கிக் கடலின் அடிப்பாகத்திற்கே சென்றுவிட்டேன். அங்கே மலையைப்போல ஒரு பெரிய திமிங்கிலம் இருந்தது. அது தன் வாயைத் திறந்து அந்தப் பக்கத்திலுள்ள எல்லா மீன்களையும் விழுங்கிக் கொண்டிருந்தது. அன்று வலை வீச்சில் மீன் கிடைக்காமற் போனதற்குக் காரணம் தெரிந்துவிட்டது. நான் கொஞ்சம்கூடத் தயங்காமல் அந்தத் திமிங்கிலத்தின் திறந்த வாய்க்குள் நுழைந்து அதன் வயிற்றுக்குள் சென்றேன். அந்தச் சமயத்தில் எனக்கு அடக்க முடியாத பசி உண்டாகி விட்டது. அதனால் திமிங்கிலத்தின் வயிற்றுக்குள்ளேயே ஒரு அடுப்புக் கூட்டி நெருப்பு மூட்டினேன். வயிற்றுக்குள் கிடந்த ஏராளமான மீன்களில் நல்ல மீன்களாகப் பொறுக்கி அவற்றை அந்த அடுப்பிலே போட்டுப் பக்குவம் செய்தேன். பசி தீரும் வரையில் சாப்பிட்டேன். பிறகு வெளியே வந்து அந்தத்