பக்கம்:தம்பியின் திறமை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

ஆகையால் நான் கையில் பற்றிக்கொண்டு வந்த நிலாக்கதிர் மேகத்திலேயே அறுந்து நின்றுவிட்டது. நான் அந்தக் கதிரை விட்டுவிட்டு ஒரு மேகத்தின்மேல் படுத்துக்கொண்டு ஆகாயத்தில் பறந்தேன். கொஞ்ச நேரத்தில் அந்த மேகம் மழையாகப் பெய்ய ஆரம்பித்தது. நான் ஒரு மழைத்துளிக்குள் புகுந்துகொண்டு பூமிக்கு வந்து சேர்ந்தேன்.”

இவ்வாறு அவன் சொல்லி முடித்து வாய் மூடுவதற்கு முன்னலே பொற்கொடி, “நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை. நான் அதை முற்றிலும் நம்புகிறேன்” என்று கூறினாள். மாணிக்கமும் தோல்வியடைந்து திரும்பினான்.

மறுநாள் காலையில் சுந்தரம் தனது திறமையைக் காட்டப் பொற்கொடியிடம் புறப்பட்டான். பொற்கொடி அவன் சொல் வதைக் கூர்ந்து கேட்கலானாள்.

“எனக்கு ஐந்து வயதாக இருக்கும்பொழுது ஒரு நாள் நான் காட்டிலே ஒரு சிங்கத்தின் மீதேறிக்கொண்டு உல்லாசமாகச் சுற்றிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் எனக் குப் பசிக்க ஆரம்பித்தது. அதனால் அங்கே தென்பட்ட ஒரு மாமரத்தின் அருகே சென்றேன். அது ஒரு விசித்திரமான மாமரம், அடிமரமானது நுனிமரம்போலச் சிறியதாகவும், துனிமரம் அடிமரம் போலப் பருத்தும் இருந்தன. அந்த மரத்தில் ஏராளமாகப் பலாப் பழங்களும் ஆப்பிள் பழங்களும் பழுத் துத் தொங்கின. நான் மரத்தின் மீதேறி விருப்பமான பழங்களைச் சாப்பிட்டுக்கொண்டே யிருந்தேன். சாப்பிடச் சாப்பிட என் உடம்பு வளர்ந்து கொண்டே இருந்தது. கைகளும் கால்களும் பனைமரங்களைப்போல நீண்டு வளர்ந்து விட்டன. வயிறு ஒரு சிறிய குன்றுபோல ஆகிவிட்டது. அந்த நிலையிலே நுனிமரத்தைவிட்டு அடிமரத்திற்கு இறங்கினல் மெல்லியதான அடிமரம் முறிந்து விழுந்துவிடு மென்று எனக்குத் தோன்றியது. அதனால் உச்சியிலிருந்தபடியே காலை நீட்டி ஒரு அடி எடுத்து வைத்து என் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த ஒரு ஏணியை எடுத்து வந்தேன். அந்த ஏணியை மரத்தின்மீது சாய்த்து வைத்துக் கீழேயிறங்கி வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.”