உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்ம பதம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

புத்தர், 'துக்கம், துக்க காரணம், துக்க நிவிர்த்தி, துக்க நிவிர்த்தி வழி' என்று கூறியவைகள் ‘நான்கு வாய்மைகள்' எனப்படும். துக்க நீக்கத்திற்கு அவர் கூறிய மார்க்கம் எட்டுப்படிகளுள்ள 'அஷ்டாங்க மார்க்கம்' என்பது. நற்காட்சி நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நல்லூக்கம், நற்கடைப்பிடி, நல்லமைதி என்றவையே அந்த எட்டுப்படிகள். [1]மனிதன் திடீரென்று தீயோனாவது மில்லை ; நல்லவனாவது மில்லை ; பல நாள், பல வருடப் பழக்கத்தினாலேயே அவன் குணம் அமைகிறது. எனவே ஆசை அழிந்து, அறியாமை நீங்கி, மெய்யறிவு பெறுவதற்கு மேற்கூறிய எட்டுப்படிகளும் பயிற்சி நிலையங்களாக அமைந்துள்ளன. மனம், மொழி, மெய்களில் தூய்மை, நியாயமான வாழ்க்கை முறை கருத்துடைமை, இடைவிடாத ஊக்கம்-இவைகளின் உதவியால் சந்தேகமும் மயக்கமும் இல்லாத அறிவு பெற்றுத் தியானம், சமாதி மூலம் மெஞ் ஞானத்தையும் முடிவில் நிருவாண முக்தியையும் பெறமுடியும்.

புத்தர் அருளிய அறவுரைகளும், சங்க விதிகளும், அவரைப்பற்றிய வரலாறுகளும் பௌத்தத் திருமுறைகளில் மூன்று பிரிவான தொகுதிகளாக உள்ளன. அவைகளுக்கு, ‘திரிபிடகங்கள்' என்று பெயர். (பிடகம்-பெட்டி, அல்லது கூடை; திரி-மூன்று) அவை விநய பிடகம், சுத்த பிடகம், அபிதம்ம பிடகம் என்பவை. தம்ம பதம் என்ற இந்நூல் சுத்த பிடகத்திலுள்ள ஐந்து பகுதிகளில், குத்தக நிகாயம் என்ற பகுதியிலுள்ளது. இந்துக்களுக்குப் பகவத்கீதை


  1. இவைகளின் விவரத்தை அநுபந்தம் ஒன்றில் காண்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/10&oldid=1356829" இலிருந்து மீள்விக்கப்பட்டது