98 ☐ தம்ம பதம்
விருப்பு வெறுப்புக்களற்ற சித்த நிறைவு ஏற்படும்; பின்னர் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பாற்பட்ட விடுதலையான பேரின்ப நிலை ஏற்படும்.
மேலே கூறிய அடிப்படையான நான்கு வாய்மைகளையும் ஏற்றுக்கொண்டவனே பெளத்த தருமத்தைப் பின்பற்ற முடியும். இந்தத் தருமத்தை மேற்கொள்பவன் தனியாக நின்று எதிலும் வெற்றி பெற முடியாது என்பதால், மூன்று புகலிடங்கள்-சரணங்கள்-ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. புத்தர், பெளத்த அடியார்களின் சங்கம், பெளத்த தருமம் ஆகிய மும்மணிகளே அந்தச் சரணங்கள், பெளத்த தருமத்தை மேற் கொள்பவன் ஆரம்பத்திலேயே இச்சரணங்களை மேற்கொள்வான்.
புத்தம் சரணம் கச்சாமி!
தர்மம் சரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமி!
அனுபந்தம் இரண்டு
முப்பத்தாறு நதிகள் (ஆசைகள்)
மனிதனுக்குரிய பொறிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி, மனம் ஆகிய ஆறு; இந்த ஆறு பொறிகளும் ஆறு வாயில்கள். இவை வெளியேயுள்ள பொருள்களின் தோற்றமான உருவத்தை (ரூபம்) அகத்திலே உணரும் குணத்தையும் (நாமம்) அறிய உதவுகின்றன. இந்த ஆறு பொறிகளும் தீண்டுதல், சுவை, உருவம், மணம், கேள்வி, நினைப்பு ஆகிய ‘ஷடாயதனங்கள்’ என்ற ஆறு புலன்களின் வழியே செயற்படும்போது, ஆசைகள் ஏற்படுகின்றன. கண் இனிய உருவத்தைக் காண விரும்புவது போலவும், மனம் இனிய கருத்துக்களை எண்ண விரும்புவது போலவும், ஒவ்வொரு பொறியும் ஒர் ஆசையுள்ளது. ஒவ்வோர் ஆசையும் மூன்று