அனுபந்தங்கள் ☐ 99
பிரிவானது; வெறும் புலன் இன்பத்தை விரும்புவது, அழியாமல் நித்தியமாக இருக்க விரும்புவது, அநித்தியமாக இருக்க விரும்புவது. எனவே பொறிகளின் ஆசைகள் 6 x 3 = 18; இவை போலவே ஆறு புலன்களின் ஆசைகளும் 6 x 3 = 18 ஆக மொத்தம் 36 ஆசைகள் என்று விசுத்தி மார்க்கம் கூறும்.
இறந்த கால ஆசைகள் 36, நிகழ் கால ஆசைகள் 36, எதிர் கால ஆசைகள் 36 என்று 108 ஆசைகளும் கணக்கிடப்படும். இவைகளின் மூலாதாரமான ஆசைகள் தீண்டுதல், சுவை, உருவம் முதலிய ஆறுதான். இந்த ஆறையும் மேலும் , சுருக்கிப் புலன் இன்பம், நித்திய வாழ்வு, அநித்திய வாழ்வு ஆகிய மூன்றையும் பற்றிய மூன்றே ஆசைகளாகக் குறிப்பிடுவது உண்டு.
அனுபந்தம் மூன்று
ஐந்து தளைகள்
வெட்டிதள்ள வேண்டிய ஐந்து:
1. உடம்பு உண்மையென்னும் எண்ணம் [ஸத்காய திருஷ்டி]
2. சந்தேகம் [வீசிகித்ஸை]
3. பயன் கருதிச் செய்யும் விரதங்கள் [சீல விரதம்]
4. புலன் அநுபவிக்கும் விஷய விருப்பம் [காமம்]
5. கோபம் [ப்ருதிகை]
கைவிட வேண்டிய ஐந்து :
1. உருவம் பெறும் ஆசை [ரூபராகம்]
2. உருவம் பெறாமல் வேறு உலகங்களில் வாழ இச்சித்தல் [அரூப ராகம்]