பக்கம்:தம்ம பதம்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முயல் தான்கு

புஷ்பங்கள்

=

14,@川 உலகத்தையும், தேவர்களுடைய எமலோகத் கையும் வெற்றி கொள்பவர் யார்? (பூந்தோட்டத் திலே) பழக்கமுள்ள வன் நல்ல மலர்களைக் கண்டு பிடிப்பதுபோல், தெளிவாக விளக்கியுள்ள தரும மார்க்கத்தைக் கண்டு பிடிப்பவர் யார்? (1) 1. இந்த உலகத்தையும், தேவர்களுடைய எமலோகத்

தையும் பயிற்சியுள்ள சீடன் வெற்றி கொள்வான். பழக்கமுள்ளவன் நல்ல மலர்களைக் கண்டு பிடிப்பது போல், தெளிவாக விளக்கியுள்ள தரும மார்க்கத் தைப் பயிற்சியுள்ள சிடன் கண்டு பிடிப்பான். (2) 10. நீரில் குமிழி போலவும், கானல் நீர் போலவும் உள்ள இந்த உடலின் தன்மையை உணர்ந்து கொண்டு, அவன் மாரனின் மலர் அம்புகளை அழித்து விட்டு, எமராஜனின் கண்ணுக்குப் புலனாகாத இடத்திற்குப் போய்விடுவான். (3) 11. உறக்கத்தில் ஆழ்ந்துள்ள கிராமத்தைப் பெரு வெள்ளம் அடித்துக்கொண்டு போகிறது; அது போல் மனிதன் (வாழ்க்கையில் இன் பங்களாகிய) மலர்களைப் பறித்துக்கொண்டு அதிலே ஈடுபட் டிருக்கும் போதே மரணம் அவனை அடித்துக் கொண்டு போய்விடுகிறது. (4)

1. பெளத்த தருமத்தில் பயிற்சி பெறும் சிடர்களின் நகுதிக்குத் தக்க நான்கு படிகள் உண்டு. முதற்படியி வள்ள வன் சரோதபன்னன்; இரண்டாம் படியிலுள்ளவன் ஸ்கிருர தகாமி; மூன்றாம் படியிலுள்ளவன் அநாகாமி; நார் காம் படியிலுள்ளவன் அருகத்து. இங்கு சீடன் ார் மது கடைசியிலுள்ள அருகத்துப் படியை அடைந்த வகை குறிக்கும். அருகத்து ஜீவன் முக்தனுக்கு நிகரான வன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/23&oldid=568636" இருந்து மீள்விக்கப்பட்டது