உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்ம பதம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புஷ்பங்கள் ☐ 15

54. புஷ்பத்தின் வாசனை காற்றை எதிர்த்து வீசாது; சத்னம், தகரம்,[1] மல்லிகை முதலிய (எல்லா) மலர்களின் மணமும் அப்படித்தான். ஆனால் நன்மக்களின் (புகழ்) மணம் காற்றையும் எதிர்த்து வீசுகிறது. நல்ல மனிதனின் புகழ்மணம் நாலு திசையிலும் பரவி நிற்கிறது. (11)

55. சந்தனம், தகரம், தாமரை, ஜவந்தி ஆகிய புஷ்ப வகைகளின் நறுமணம் நற்குணத்தின் நறுமணத்திற்கு ஈடாகாது. (12)

56. தகரம் அல்லது சந்தனத்தின் வாசனை அற்பமானது; நற்குணமுடையவர்களின் உத்தமமான உயர் மணம் தேவர்களிடத்தும் சென்று வீசுகிறது.

57. இத்தகைய சீலங்களுடையவர்களாய், விழிப்புடன் கருத்தோடு வாழ்பவர்களாய், பூர்ண ஞானத்தால் பொலிவுற்று விளங்குவோர்களிடம் செல்ல மாரனுக்கு வழி தெரியாது.

58. வழியிலே கொட்டிய குப்பைக் குவியலிலிருந்து மனத்திற்கினிய மணத்துடன் தாமரை மலர்கிறது.

59. அதுபோலவே, குப்பை போலுள்ள குருட்டு மக்களிடையே மெய்ஞ்ஞானச் சுடரான புத்தரின் சீடன் தனது ஞானத்தால் ஒளி வீசி விளங்குகின்றான். (16)


  1. தகரம்–மணமுள்ள ஒரு வகைச் செடி: இதிலிருந்து வாசனைப் பொடி தயாரிப்பதுண்டு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/25&oldid=1357529" இலிருந்து மீள்விக்கப்பட்டது