பக்கம்:தம்ம பதம்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இயல் ஐந்து

பேதை

---

(50.

6 .

(52.

(53.

64.

விழித் திருப்பவனுக்கு இரவு நெடிதாகும்; களைத் திருப்பவனுக்கு வழி நெடுந் தூரமாகும்; நால் லறத்தை அறியாத மூடருக்கு (ஜன ன-மரணமாகிய) ஸ்ம்ஸ்ாரத்தொடர் எல்லையற்றதாகும். (1)

(ஸம்ஸார) யாத்திரையில், ஒருவன், தனக்கு நிகரான அல்லது மேலான நண்பன் துணைக்குக் கிடைக்கா விட்டால், தன்னந்தனியே தொடர்ந்து செல்வானாக; மூடனுடைய துணை உதவியாகாது. (2)

‘என் பிள்ளைகள், என் செல்வம்' என்ற சிந்தனை யால் மூடன் துயரப்படுகிறான். அவனே அவனுக்குச் சொந்தமில்லை! பிள்ளைகளும் தனமும் எப்படிச் சொந்தமாகும்? (8)

பேதை ன் மடமையை உணர்ந்தால், அந்த அள வுக்கு அவன் அறிவுள்ள வன்; தன்னைப் பண்டி தனாக எண்ணிக்கொள்ளும் பேதை முழு மூடனே யாவான். (4)

அகப்பை குழம்பின் சுவையை அறியாது; அது போல் வாழ்நாள் முழுவதும் பேதை ஞானியோடு பழகி வந்தாலும், தருமத்தை அவன் அறிவ தில்லை. - (5)

5. நாக்கு குழம்பின் சுவை அறிகிறது; அதுபோல்

கருத்துள்ளவன் சிறிது நேரம் ஞானியோடு பழகினா லும், அவன் தருமத்தின் இயல்பைத் தெரிந்து கொள்கிறான். (6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/26&oldid=568639" இருந்து மீள்விக்கப்பட்டது