பக்கம்:தம்ம பதம்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


|,

III,

|H.

s|[].

T ().

7|.

72.

பேதை 25エ

புல்லறிவுள்ள மூடர்கள் தாமே தமக்குப் பகைவர்; அவர்கள் பாவ கருமங்களைச் செய்து கொண்டு திரி கின்றனர்; அவை கசப்பான (துன்பக்) கனிகளையே அளிக்கின்றன. (7).

ந்தக் கருமத்தைச் செய்தால் பின்னால் மனம் நோகுமோ, எதன் பயனை அழுதுகொண்டே அநுப விக்க வேண்டியிருக்குமோ, அது நற்செயல் ஆகாது"

(8)

காந்தக் காரியத்தைச் செய்தால் பின்னால் மனம் இன்பமடையுமோ, எதன் பயனை உள்ளக்களிப் போடு அநுபவிக்க வேண்டியிருக்குமோ, அதுவே. நற்செயல். (9)

பாவம் பழுத்துப் பயனளிக்காத வரையில் மூடன் அதைத் தேன் என்று விரும்புகிறான்; ஆனால் அது பழுத்துப் பயனளிக்கையில் அவன் (ஆறாத்) துயரை அடைகிறான். (10)

மாதக் கணக்காக மூடன் தர்ப்பைப் புல்லின் முனையி னால் (துளித்துளியாக) உணவெடுத்து உண்டு வந்தாலும், தருமத்தை நன்கு அறிந்தவர்களின் பதினாறில் ஒருபகுதிக்குக்கடிட அவன் ஈடாகமாட் டான். o (11)

புதிதாய்க் கறந்த பால்போலே, பாவச் செயல் உடனே புளிப்பாக மாறுவதில்லை ; நீறு பூத்த நெருப்பைப் போல் கனன் றுகொண்டேயிருந்து அது மூடனைத் தொடர்கிறது. (12)

(பாவகருமத்தின் தன்மையை) முடன் அறியும்

போது அவ்வறிவு அவனுக்கு நன்மையா யில்லாத

தோடு அவனுக்கு இருக்கிற இன்பத்தையும் அழித்து, அவன் தலையையும் பிளக்கிறது. (13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/27&oldid=568640" இருந்து மீள்விக்கப்பட்டது