பக்கம்:தம்ம பதம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் ஆறு

ஞானி

76. குற்றங்களைக் கண்டித்து, விலக்க வேண்டியவைகளை விலக்கக்கூடிய ஞானியைக் கண்டால் ஒருவன், அந்த ஞானி புதையல் பொக்கிஷங்களுக்கு வழிகாட்டுவோன் என்று கருதி, அவரைப் பின்பற்ற வேண்டும். அத்தகைய மனிதரைப் பின்பற்றுவதால் நன்மையே தவிர தீமையில்லை. (1)

77. அவர் கண்டிப்பார், அறிவு புகட்டுவார், தீயோரிடமிருந்து விலக்குவார். நல்லோர் அவரை நேசிப்பர். தீயோரே வெறுப்பர். (2)

78. தீயோருடன் சேரவேண்டாம்; இழிந்தவருடன் இணக்கம் வேண்டாம்; ஒழுக்கமுள்ளவரோடு உறவாடுக; சான்றோர் தொடர்பை மேற்கொள்க. (3)

79. தருமத்தைப் பருகுவோன். மேலோர் அறிவுறுத்திய தருமத்தில் அவன் எப்போதும் இன்புற்றுக் கொண்டிருக்கிறான். (4)

80. நீரை நெறிப்படுத்திச்செலுத்துவர் [1] அம்பை நேராக நிமிர்த்துவர் வில்லாளிகள்; மரத்தில் (சித்திரங்கள்) பொளிப்பார்கள் தச்சர்கள்; தம்மைத் தாமே அடக்கியாள்வர் அறிஞர். (5)

81. நிலையான பாறை புயல் காற்றுக்கும் அசையாமலிருப்பது போல், ஞானிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அசைவதில்லை. (6)


  1. சிற்பக்கலைஞர்;சிற்பக் கலைஞர்- ‘எஞ்சினீயர்கள்’ என்று இக் காலத்தில் அழைக்கப் பெறுவோர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/29&oldid=1381793" இலிருந்து மீள்விக்கப்பட்டது