இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34 ☐ தம்மபதம்
112. (சாவேயில்லாத) அமுத நிலையாகிய முக்தியைப் பற்றி அறியாமல் ஒருவன் நூறு வருடம் வாழ்வதைக் காட்டினும், அந்த அமுத நிலையை அறிந்து ஒருவன் ஒருநாள் வாழ்வதே மேலானது. (13)
113. உத்தம் தருமத்தை அறியாமல் ஒருவன் நூறு வருடம் வாழ்வதைக் காட்டிலும், ஒருவன் உத்தம தருமத்தை அறிந்து ஒருநாள் வாழ்வதே மேலானது.
(14)