பக்கம்:தம்ம பதம்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 () தம்ம பதம்

120.

124.

என் பக்கம் அண்டாது' என்று புண்ணியத்தை இலேசாக எண்ண வேண்டாம். துளித்துளியாக விழும் தண்ணிராலேயே குடம் நிரம்பிவிடும். ஞானி கொஞ்சம் கொஞ்சமாகப் புண்ணியத்தைச் சேர்த்தாலும் அவன் புண்ணியத்தால் நிரம்பி விடு கிறான். * : (7)

போதிய வழித்துணை யில்லாத வணிகன் மிகுந்த பொருளுடன் பயமுள்ள பாதையிலே செல்ல மாட்டான்; வாழ்வில் ஆசையுள்ளவன் விஷத்தை விரும்பமாட்டான்; இவர்களைப்போலவே, ஞானி பாவச் செயல்களை விலக்க வேண்டும். (8)

கையில் புண் ணில்லா தன் விஷத்தைக் கையால் தொடலாம்; புண்ணில்லாதவனை விஷம் பாதிப்ப தில்லை. திய காரியத்தைச் செய்யாதவனைப் பாவம் பாதிக்க து. - 9)

நிரபராதியான ஒருவனுக்கு எவன் திங்கு செய்தா லும், பாவமற்ற பரிசுத்தமான ஒருவனுக்கு எவன் திங்கு செய்தாலும், காற்றுக்கு எதிராகத் தூவிய மண் மேலேயே வந்து சாடுவது போல், அந்த மூடனைப் பாவம் பற்றிக்கொள்கிறது. (10)

சிலர் கருக்குழியை அடைந்து (மறுபடி) -* பிறக்

கிறார்கள்; பாவ கருமத்தைச் செய்தவர்கள் நிரயத்தை அடைகிறார்கள்; நற்கருமத்தைச் செய்தவர்கள் சுவர்க்கத்தை அடைகிறார்கள்;

ஆஸ்வங்களை ஒழித்த பற்றற்றவர்கள் பரிநிரு வாணத்தை அடைகிறார்கள். (11)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/38&oldid=568651" இருந்து மீள்விக்கப்பட்டது