பக்கம்:தம்ம பதம்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 தம்ம பதம்

| ().

| 3 ||.

| :)2.

of 53.

| 4.

கல்வியில்லாதவன் மாடுபோல் முதிர்ந்து வளர் கிறான்; அவனுடைய ஊன் தான் பெருகுகிறது ஆனா ல் அறிவு வளர்வதில்லை. * - (7)

பலவிதமான பிறவிகளை நான் எடுத்தாயிற்றுஇந்த (உடலாகிய) குடிலைக் கட்டியவனை நான் இரவும் பகலும் தேடியும் காணவில்லை. மீண்டும் மீண்டும் பிறப்பது துக்கமாகவேயுள்ளது. (8)

குடிலைக் கட்டிய கொற்றனே இப்போது உன் னைக் கண்டு கொண்டேன்! குடிலை மறுபடி நீ கட்ட முடியாது. உன்னுடைய உத்திரங்கள் எல்லாம் உடைந்துவிட்டன, குடிலின் முகடும் குலைந்து விட்டது. என் சித்தம் நிருவானப் பேற்றில் இலயித்து விட்டது; (அதனால்) ஆசை கள் அவிந்தொழிந்து விட்டன! (9)

இளமையிலே பிரம்மசரியத்தைப் பேணாதவரும், செல்வத்தைத் தேடிக்கொள்ளாதவரும், மீன்களில் லாத குளத்தில் இரைதேடிக் காத்திருக்கும் கிழக்

கொக்குப் போலத் தவிப்பார்கள். (10)

இளமையிலேயே பிரம்மச ரியத்தைப் பேணாத வரும், செல்வத்தைத் தேடிக்கொள்ளாதவரு ம், உளுத்துப் போன விற்களைப்போல், பழமையை கண் ணி எண்ணிப் பரிதவிப்பார்கள். (11)

1.

கொற்றன்-ஆசையே இங்குக் கொற்றனாகக் கூறப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/44&oldid=568657" இருந்து மீள்விக்கப்பட்டது