பக்கம்:தம்ம பதம்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


M (;

| 72

17 4.

17 (j.


1. சோதாபத்தி-நிருவான வழியில் முதற்படி.

() தம்ம பதம்

இருளே இவ்வுலகின் இயற்கை; இங்கு சிலரே (விழி பெற்று) உண்மையைக் காண முடியும். வலையிலிருந்து தப்பிய பறவைகள் போல, சிலரே சுவர்க்கம் செல்கின்றனர். - (8)

அன்னங்கள் கதிரவன் வழியில் செல்கின்றன; அவை தங்களுடைய அற்புத ஆற்றலால் ஆகாய வழியே செல்கின்றன. மாரன்ையும் அவன் படை களையும் வென்ற ஞானிகள் (அவ்வாறே) இந்த உலகை விட்டு வெளியே செல்கிறார்கள். (9

ஒப்பற்ற தருமத்தைக் கைவிட்டுப் பொய்யே பேசியும், பரலோகத்தைப் பரிகசித்தும் வருவோன் செய்யத் தகாத பாவம் எதுவுமில்லை. (10)

கருமிகளே தேவர் உலகை நண்ணுவதில்லை மூடர்களே ஈகையைப் போற்றுவதில்லை. ஆனால் ஞானி ஈகையில் இன் புற்று, (அதனால்) மறு உலகிலும் சுகமடைகிறான். (11)

பாருலகை ஒரு குடைக்கீழ் ஆள்வதைப் பார்க்கி னும் கவர்க்கம் புகுவதைப் பார்க்கினும், எல்லா உலகங்களின் மீதும் ஆதிக்கியம் செலுத்துவதைப் பார்க்கினும் உயர் வானது சோதாபத்திப் பயன் அடைவது. (12).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/48&oldid=568661" இருந்து மீள்விக்கப்பட்டது