பக்கம்:தம்ம பதம்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- NI)

|||s),

{ {)ፄ,

|s)|),

1s)4.

புத்தர் 49

துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கமாகிய அஷ்டாங்க மார்க்கம்.'

(18)

இதுவே பாதுகாப்பான புகலிடம்; இதுவே தலை சிறந்த சரணம். இந்த அடைக்கலத்தை அடைந்த பிறகு, மனிதன் எல்லா வேதனைகளிலிருந்தும் விடுபடுகிறான். (14)

மக்களிலே திலகமான உத்தம புருடர் (புத்தர்1 தோன்றுதல் துர்லபம். அவர் கண்ட இடங்களில் பிறப்பவர் அல்லர். அத்தகைய பரம ஞானி எங்கே பிறந்தாலும் அந்தக் குலம் விளக்கமடை கிறது. + (15)

புத்தர்களின் தோற்றம் நன்மையளிக்கும்; அவர் களின் தரும உ ப. .ே த ச ம் நன்மையளிக்கும்; பெளத்த சங்கத்தில் சேர்தல் நன்மையளிக்கும்; சங்கத்தில் சேர்ந்தவர்களின் தவமும் நன்மை யளிக்கும். -- (16)

தீமைகளையெல்லாம் வென்று, துக்க வெள்ளத் தைத் தாண்டிக் கரையேறிய வணங்கத்தக்க புத்தரையோ, அவர் அடியார்களையோ வணங்கு வோன்- (17)

நிருவான நிலைபெற்று, எதற்கும் அஞ்சாது (காற்றைப்போல்) சஞ்சரிக்கும் முத்தர்களை வணங்குவோன்-அடையும் பு ன் னி ய த் ைத எவரும் அளவிட முடியாது. (18)

. இதன் விளக்கத்தை அனுபந்தம் ஒன்றில் காண்க. 4-מן

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/51&oldid=568664" இருந்து மீள்விக்கப்பட்டது