56 ☐ தம்ம பதம்
224. எப்போதும் விழிப்புடன் இருப்பவர்கள், அல்லும் பகலும் படித்தறிந்தவர்கள்; நிருவாண நாட்டத்திலேயிருப்பவர்கள்-அவர்களுடைய ஆஸ்வங்கள் அற்றொழியும். (6)
225. ‘மெளனமாயிருப்பவனையும் நிந்திக்கிறார்கள்; அதிகம் பேசுவோனையும் நிந்திக்கிறார்கள்! மிதமாய்ப் பேசுவோனையும் நிந்திக்கிறார்கள்-'ஒ அதுலா!'[1] இது இன்று தோன்றியதன்று; இது ஒரு பழங்காலத்து மொழி. நிந்திக்கப்படாதார் எவருமே உலகில் இல்லை. (7)
226. முற்றிலும் நிந்திக்கப்பட்டவனும், முற்றிலும் புகழப் பட்டவனும் ஒருகாலும் இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை, இப்போதுமில்லை. (8)
227. விவரம் தெரிந்த பெரியோர் நாள்தோறும் கவனித்து வந்து எவனைக் குற்றமற்றவன், மேதாவி என்றும், தியானமும் சீலமும் நிரம்பியவன் என்றும் புகழ்கிறார்களோ, அவனை- (9).
228. சாம்பூநதப் [2] பொன்னாற் செய்த நாணயம் போன்ற அவனை-நிந்திக்கக்கூடிய தகுதியுடையவர் யார்? தேவர்களே அவனைப் புகழ்கின்றனர்; பிரம்மாவாலும் அவன் புகழப்படுகிறான். (10)
229. உடம்பின் எரிச்சலை அடக்கிக் காக்கவும், உடலை அடக்கி வைக்கப் பழகவேண்டும். தீய ஒழுக்கத்தை ஒழித்து, நல்ல ஒழுக்கத்தைப் பேணி வரவும். (11)