இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கோபம் ☐ 57
230. வாக்கினால் வரும் கோபத்தை அடக்கிக்காக்கவும், நா அடக்கத்தில் பழகவேண்டும். வாக்கினால் உண்டாகும் தீமையை ஒழித்து, நல்ல ஒழுக்கத்தைப் பேணி வரவும்.
(12)
231. மனத்தில் வரும் கோபத்தை அடக்கிக் காக்கவும். மன அடக்கத்தில் பழக வேண்டும். மனத்தில் உண்டாகும் தீமையை ஒழித்து, நல்ல ஒழுக்கத்தைப் பேணி வரவும். (13)
232. உடலை அடக்கி, நாவை அடக்கி, மனத்தையும் அடக்கியுள்ள ஞானிகளே உண்மையான நல்லடக்க முள்ளவர்கள். (14)