பக்கம்:தம்ம பதம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இயல் பதினெட்டு

குற்றம்

23:3.

2:3(;.

இப்போது உலர்ந்த சருகுபோல் ஆகிவிட்டாய்; எமது தர்கள் உன் அண்டையில் வந்திருக்கின் றனர். நீயும் பிரிவதற்கான வாயிலில் (வந்து) நிற் கிறாய், ஆனால், நீயோ செல்லும் வழிக்கு வேண் டிய உணவு எதுவும் தயாரிக்கவில்லை. (1)

நீ (அடைக்கலம் புகுவதற்கான) ஒரு தீவை தயா ரித்துக்கொள்; விரைவாக முயற்சி செய்; அறிஞ னாக இரு. உன் மலங்கள் துடைக்கப்பட்டுப் பாவங்கள் நீங்கியதும் நீ மேலோர் தங்கும் சுவர்க்

கத்தை அடைவாய். (2)

உன் வாழ்க்கை முடியப் போகிறது. எமன்

சந்நிதிக்கு நீ வந்துவிட்டாய். வழியிலே தங்கும்

இடமும் வேறில்லை. நீயோ செல்லும் வழிக்கு

வேண்டிய உணவு எதுவும் தயாரிக்கவில்லை. (3)

நீ (அடைக்கலம் புகுவதற்கான) ஒரு தீவைத் தயா பித்துக் கொள்; விரைவாக முயற்சி செய்; அறிஞ னாக இரு. உன் மலங்கள் துடைக்கப்பட்டுப் பாவங்கள் நீங்கியதும், மறுபடி பிறப்பும் மூப்பும் உனக்கில்லை. - (4)

1.

தீவு-பிற விக் கடலில் தவிப்பவனுக்குத் தீவு

தாரகமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/60&oldid=568673" இருந்து மீள்விக்கப்பட்டது