பக்கம்:தம்ம பதம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றம் ☐ 61

251. பிறர் குறைகளிலேயே நோட்டமுள்ளவன் , எப்போதும் புறங்கூறிக் கொண்டேயிருப்பவன், தன் குற்றங்களை வளர விடுகிறான்; அவன் தன் ஆஸவங்களை அழித்தல் கடினமாகி விடும். (19)

252. ஆகாய வீதியிலே பாதை கிடையாது. அதுபோல் சமணனின் ஒழுக்கம் (அகத்திலன்றிப்) புறத்திலேயில்லை. மக்களோ உலகப்பற்றில் இன்புறுகின்றனர். உலகப்பற்று இல்லாதவர் ததாகரே.[1] (20)

253. ஆகாய வீதியிலே பாதை கிடையாது. அதுபோல் சமணனின் ஒழுக்கம் (அகத்திலன்றிப்) புறத்திலேயில்லை. பிரபஞ்சத்திலே நிலையானது எதுவுமில்லை; புத்தர்களுக்கோ நிலையற்றது எதுவுமில்லை. (21)


  1. ததாகதர்-புத்தர், முன்னோர் (முந்திய புத்தர்கள்) வழியை மேற்கொண்டவர் என்று பொருள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/63&oldid=1358031" இலிருந்து மீள்விக்கப்பட்டது