278.
279.
281.
282.
மார்க்கம் 67
எவன் உரிய வேளையில் விழித்து எழாமலுள் ளானோ, எவன் பலமுள்ள வாலிபனாயிருந்தும், சோம்பரில் ஆழந்து கருத்திலும் சிந்தனையிலும் உறுதியற்றுள்ளானோ, அந்த மந்த புத்தியுள்ள சோம்பேறி ஞான மார்க்கத்தை அடைய
(ԼԲ ւգ- tԼ1fT 3,1. (8)
ஒருவன் தன் நாவைக் காத்து, மனத்தை அடக்கி உடலால் தீமை எதையும் செய்யாது இருப்பானாக. செயல் புரிவதற்கு ஏற்பட்ட இந்த மூன்று வழி களையும் ப ரி சு த் த ம ா க வைத்திருப்பவன். பெரியோர் அருளிய நன்னெறியை அடைவான்.
(9)
தியான த்திலிருந்து ஞானம் உதயமாகிறது; தியான மில்லாவிடில் ஞானம் குறைகிறது; ஆக்கமும் கேடும் வரக்கூடிய இந்த இரு வழிகளையும் அறிந்து, அறிவு பெருகும் வழியை மனிதன் மேற் கொள் வானாக. (10)
ஒபிக்குக்களே! ஒரு மரத்தை மட்டும் வெட்டினால் போதாது, ஆசைக் காட்டையே அரிந்து தள்ளுங் கள்! ஆசைக் காட்டிலிருந்தே அபாயம் வருகிறது. காட்டையும் புதர்களையும் வெட்டி வீழ்த்திய பிறகு, நீங்கள் விடுதலை பெறுவீர்கள். (1 1J
ஆடவன் பெண்களிடம் கொள்ளும் காம ஆசை எதுவரை அழிக்கப்படாமல் அணுவளவேனும் இருக்கிறதோ, அதுவரை, பால்குடி மறவாத பசுங் கன்று தன் தாயிடம் ஒட்டிக் கொள்வது போல், அவன் மனம் (வாழ்வைப்) பற்றிக் கொண்டே யிருக்கும். (12)