பக்கம்:தம்ம பதம்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


|H

'|}.

28, 1.

2

8

5

28(;.

287.

| கம்ம I ாதம்

ச க்காலத்தில் தோன்றும் குமுத புஷ்பத்தை க் க ைகயால் பறித்தெடுப்பதுபோல், ஆன்ம நேயத்தை அறுத்தெறிக. புத்தர் போதித்த நிருவான முக்திக்குரிய சாந்தி மார்க்கத்தைப் போற்றி நடக்கவும். (18)

மு. னாயிருப்பவன், கார் காலத்தில் இங்கே வசிப் பேன்!” என்றும், குளிர் காலத்திலும், கோடை காலத்திலும் அங்கே வசிப்பேன்?’ என்றும் கருது கிறான்; (இடையிலே வரக்கடடிய மரணம் என்ற) இடையூற்றைப் பற்றி அவன் எண்ணுவதில்லை.

H (14)

(மக்கள்) உறங்கிக் கொண்டிருக்கையில் பெரு வெள்ளம் வந்து கிராமத்தையே அடித்துக் கொண்டு போய்விடுகிறது; அதுபோல், தன் மக்கள் பசுக்கள் முதலிய செல்வங்களில் மகிழ்ந்து மயக்கத்திலுள்ள மனிதனை எமன் வந்து அடித்துக் கொண்டு போகிறான். (15)

எமனால் பிடிக்கப்பட்ட ஒருவனை அவன் பெற்ற மக்கள் காக்க முடியாது; தந்தையும் தமர்களும் காக்க முடியாது; உற்றாரை நம்பியும் பயனில்லை. He (16)

இதன் உண்மையை உணர்ந்து , நற்குணமுள்ள ஞானி நிருவான முக்திக்குரிய வழியிலேயுள்ள தடைகளை உடனே நீக்கிக் கொள்ளட்டும். (17)

1, gifFF-FFTFIFF

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/70&oldid=568683" இருந்து மீள்விக்கப்பட்டது