உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்ம பதம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் இருபத்தொன்று

பலவகை


288. அற்ப சுகத்தை இழப்பதால் பெரிய இன்பத்தைக் காணலாம் எனின், ஞானி அற்ப சுகத்தைக் கைவிட்டுப் பெரிய இன்பத்தை நாடுவானாக. (1)

289. பிறரைத் துன்புறுத்தித் தான் இன்பமடைய விரும்புவோன், துவேஷத் தளைகளில் சிக்குண்டு, துவேஷத்திலிருந்து விடுபடுவதில்லை. (2)

290. செய்யத் தக்கதைக் கைவிட்டு, தகாததைச் செய்தால் கட்டுக்கடங்காத அத்தகைய கருத்தற்றவர்களின் ஆஸவங்கள் வளர்ந்துகொண்டேயிருக்கும். (3)

291. எவர்கள் உடலின் இயல்பை உணர்ந்து மனத்தில் எப்போதும் கவனமாயிருந்து, செய்யத் தகாதவைகளை விலக்கி, செய்யத் தக்கவைகளையே செய்து வருகிறார்களோ, அத்தகைய கருத்துடைய அறிவாளரின் ஆஸவங்கள் அழிந்தொழிகின்றன. (4)

292. உண்மையான பிராமணன் ஒருவன், தன் தாயையும், தந்தையையும், கூத்திரிய மன்னர் இருவரையும் கொன்றிருந்த போதிலும், குடிகளோடு ஒர் இராஜ்யத்தையே அழித்திருந்த போதிலும், அவன் பாவமற்றவனாவான்.[1] (5)


  1. உண்மையான பிராமணன் இத்தகைய பாவம் எதையும் செய்ய மாட்டான் என்பது கருத்து, இவ்வாறே அடுத்த சூத்திரத்தையும் கொள்ள வேண்டும். புத்தபகவர், தம் காலத்தில் வழங்கிய கதைகள், புராணங்கள். சாஸ்திரங்களிலிருந்து சில சிறப்புப் பெயர்களையும், சொற்களையும், கதைகளையும் எடுத்துக் கையாள்வது உண்டு. ஆனால், அவருடைய கருத்துக்களில் வேற்றுமையிருக்கும். பிரம்மா, தேவர்கள், சுவர்க்கம், நரகம் முதலிய சொற்களை அவர் உபயோகித்திருக்கிறார். சாதாரண மக்களுக்குத் தம் கருத்துக்களை எளிதாகக் கூறுவதற்காகவே அவர் இவைகளைக் கையாண்டிருக்கிறார். உலகங்கள் யாவையும் படைத்த
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/71&oldid=1381873" இலிருந்து மீள்விக்கப்பட்டது