பலவகை ☐ 71
296. கெளதமருடைய சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும் பகலும் எப்போதும் அவர்களுடைய சிந்தனை யெல்லாம் பெளத்த சங்கத்தைப் பற்றியவையே. (9)
297. கெளதமருடைய சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள், இரவும் பகலும் அவர்களுடைய சிந்தனை யெல்லாம் உடலின் தன்மையைப் பற்றியவையே. (10)
298. கெளதமரின் சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும் பகலும் எப்போதும் அ வர்கள் மனம் அஹிம்சையைப் பற்றியே சிந்தித்திருக்கும். (11)
299. கெளதமரின் சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும் பகலும் எப்போதும் அவர்கள் மனம் தியானத்திலேயே திளைத்திருக்கும். (12)
300. உலக வாழ்வை விட்டுத் துறவியாதல் கஷ்டம்; அவ்வாழ்வை அநுவிப்பதும் கஷ்டம். இல்லறந்தானாக வீட்டிலிருந்து வாழ்வதும் கஷ்டம். ஆதலால் எவனும் நாடோடியாகத் திரிய வேண்டாம் , எவனும் துன்பத்தில் விழவும்வேண்டாம். (13)
301. சிரத்தையும், குணமும், புகழும், செல்வமும் பொருந்தியவன் எந்தெந்த இடத்தில் தங்கி யிருந்தாலும் அங்கங்கே போற்றப்படுகிறான். (14)
302. நல்லோர் , இமய மலையைப்போல், நெடுந்துாரத் திலிருந்தே பிரகாசிக்கின்றனர்; ஆனால் தீயோர் இரவின் இருளூடு எய்த அம்புகளைப்போல் கண்ணுக்கே புலனாவதில்லை. (15)
303. ஒருவன் தனியே அமர்ந்து, தனியே உறங்கி, தனியே வாழ்ந்து, மடிமையை ஒழித்துத் தானே தன்னை அடக்கி வைத்துக்கொண்டால், ஆசைகளற்ற நிலையில் அவன் இன்பம் பெறுவான். (16)