உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்ம பதம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் இருபத்தி நான்கு

அவா


332. சிந்தனையில்லாமல் திரியும் மனிதனுக்கு அவா மாலுவக் கொடிபோல் வளர்கிறது. வனத்திலே வாநரம் பழத்தை நாடி அங்குமிங்கும் தாவித் திரிவது போல், அவன் எடுக்கும் பிறவிகளுக்கு அளவில்லை. (1)

333. (இவ்வுலகில்) எவனை இந்தக் கொடிய விஷம் போன்ற அவா பற்றிக்கொள்கிறதோ, அவனுக்குச் சோகம் காட்டுப் புல்லைப் [1] போல் வளர்ந்து பெருகிக் கொண்டேயிருக்கும். (2)

334. இவ்வுலகில் எவன் அடக்க அரிதான இந்தக் கொடிய அவாவை அடக்கி வெல்கிறானோ, அவனுடைய சோகங்கள், தாமரை யிலையில் நீர்த்துளிகள் ஒட்டாமல் சிதறுவதுபோல்,உதிர்ந்து ஒழிகின்றன. (8)

335. இங்கே கூடியுள்ள உங்கள் அனைவருக்கும் நன்மையான இந்த உபதேசத்தைச் செய்கிறேன். வீரணப்புல்லின் கிழங்குக்காக [2] அப்புல்லையே


  1. காட்டுப்புல்-பீரணம் அல்லது வீரணம் என்ற ஒருவகைப் புல் இங்கே கூறப்படுகிறது.
  2. இக்கிழங்கு ‘உஸீரம்’ என்று குறிக்கப்பெற்றிருக்கிறது; இது, வாசமுள்ளது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/80&oldid=1381886" இலிருந்து மீள்விக்கப்பட்டது