அவா ☐ 79
தோண்டி எடுப்பதுபோல, அவாவின் வேரைத் [1] தோண்டி எடுங்கள்; ஆற்று வெள்ளம் (கரையிலுள்ள) கோரைப் புல்லை அழிப்பதுபோல், மாரன் உங்களைத் திரும்பத் திரும்ப அழிக்காதபடி காத்துக் கொள்ளுங்கள். (4)
336. மரத்தை வெட்டினாலும், அதன் வேர் சேதமில்லாமல் உறுதியாயிருந்தால், மீண்டும் தளிர்த்து விடுகிறது; அதுபோல, அவாவின் காரணங்களான வேர்கள் அழிக்கப்படாவிட்டால், துக்கம் திரும்பத் திரும்ப வளர்ந்துகொண்டேயிருக்கும். (5)
337. எவனுடைய முப்பத்தாறு நதிகளும் [2] புலன்களின் இன்பத்தையே நாடி வெள்ளமிட்டுச் செல்கின்றனவோ, எவனுடைய சிந்தனைகள் காம வெறியிலேயே நிலைத்திருக்கின்றனவோ, அத்தகைய தவறான காட்சியுள்ளவனை வெள்ளம் அடித்துக் கொண்டு போகிறது. (6)
338. நதிகள் நாற்புறமும் ஒடிப் பாய்கின்றன; அவா என்னும் கொடி முளைத்தெழுந்து நிலைத்துப் படர்கிறது. இக்கொடி முளை விடுவதைக் கண்டதும் மெய்யறிவின் துணையால் இதை வேரோடு பிடுங்கி எறியவும். (7)
- ↑ அவாவின் வேர்-உலக வாழ்வின் துக்கம். துக்க காரணம் துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் ஆகிய உண்மைகளை அறியாதிருத்தலே அறியாமை (அவித்தை).அவித்தையிலிருந்து செய்கை(ஸம்ஸ்காரம்) தோன்றுகிறது. செய்கையிலிருந்து உணர்ச்சி (விஞ்ஞானம்), உணர்ச்சியிலிருந்து அருவும் உருவும் (நாமரூபம்), அருவுருவிலிருந்து ஆறு பொறிகளின் வாயில்கள் (ஷடாயதன்ங்கள்), வாயில்களிலிருந்து ஊறு (ஸ்பரிஸம்)ஊற்றிலிருந்து நுகர்ச்சி (வேதனை) நுகர்ச்சியிலிருந்து அவா அல்லது வேட்கை (திருஷ்ணை உண்டாகின்றன. எனவே அவாவின் (திருஷ்ணையின்) ஆணிவேர் அறியாமை (அவித்தை.)
- ↑ இவற்றின் விவரம் அனுபந்தம் இரண்டில் காண்க.