உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்ம பதம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவா ☐ 81

344. இந்தப் பாசம் (கழற்றவோ, அறுக்கவோ) எளிதான முறையில் தளர்ச்சியாகவும், உறுதியற்றும் இருந்தாலும், இதை அவிழ்ப்பதோ அறுப்பதோ கஷ்டம். இதுவே பலமான தளை என்று அறிஞர் கூறுவர். ஆசைகளற்றுப் புலன்களின் இன்பங்களைக் கைவிட்டு உலகைத் துறப்பவர்கள் இதையும் அறுத்து விடுகிறார்கள். (13)

345. சிலந்தி தானே அமைத்த வலைக்குள் சுற்றுவது போல, ஆசைகளில் அழுந்திய மக்கள் வெள்ளத்தின் போக்கில் மிதந்து செல்கின்றனர். அறிவு பெற்றவர்கள், (அவா என்னும்)இந்தத் தளையை அறுத்துக் கொண்டதும் உலகைத் துறந்து, கவலைகளில்லாமல், துக்கங்களை யெல்லாம் விட்டுக் கடந்து போகின்றனர். (14)

346. முன்னால் இருப்பதையும், பின்னால் இருப்பதையும் நடுவில் இருப்பதையும் கடந்து பிறவியின் மறுகரையை அடைவாயாக. மனம் முழுவதும் விடுதலை யடைந்து விட்டால், நீ மறுபடி பிறப்பும் மூப்பும் பெறமாட்டாய். (15)

347. கலங்கிய சிந்தனைகளும், உணர்ச்சி வெறிகளும், இன்பத்தில் தேட்டமும் உள்ள மனிதனுக்கு அவா வளர்ந்து கொண்டேயிருக்கும்; அவன் தன் கட்டைப் பலப்படுத்திக் கொள்கிறான். (16)

348. சிந்தனைகளைச் சாந்தப் படுத்துவதில் நாட்டமுள்ளவன், எப்பொழுதும் விழிப்புள்ளவன், (உலகில்) இன்பமில்லை என்பதில் கருத்தைச் செலுத்துபவன், மாரனின் மரணத்தளையிலிருந்து விடுபடுவான்-அதை முறித்தெறிவான். (17)

த-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/83&oldid=1359889" இலிருந்து மீள்விக்கப்பட்டது