உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்ம பதம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிக்கு ☐ 87

377. ஓ பிக்கு! உன்னை நீயே துண்டிக்கொள்; உன்னை நீயே சோதனை செய்துகொள்; உன்னை நீயே தற்காப்புச் செய்து கவனமாயிருந்தால், நீ இன்புற்று வாழ்வாய். (20)

378. ஒருவன் தனக்குத்தானே தலைவன், தனக்குத் தானே புகலிடம். ஆதலால், வணிகன் உயர்ந்த குதிரையை அடக்கிப் பழகுவதுபோல உன்னை நீயே அடக்கிப் பழகவும். (21)

379.மன மகிழ்ச்சியோடும், அமைதியோடும், புத்த தருமத்தில் நம்பிக்கை கொண்ட பிக்கு (துயரமான) வாழ்வை நீத்து இன்பமயமான சாந்தி நிலையை அடைவது திண்ணம். (22)

380.இளவயதாயிருப்பினும், புத்த தருமத்தில் மன மகிழ்ச்சியுடன் ஈடுபடும் பிக்கு, மேகத் திரையிலிருந்து விடுபட்ட வெண்மதி போல, இவ்வுலகில் ஒளியைப் பரப்புகிறான். (23)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/89&oldid=1359984" இலிருந்து மீள்விக்கப்பட்டது