பக்கம்:தம்ம பதம்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அனுபந்தம் ஒன்று நால்வகை வாய்மைகள்

பெளத்த தருமத்திற்கு அடிப்படையான நான்கு

உன்னத உண்மைகள் அல்லது சத்தியங்கள் துக்கம்,

துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் ஆகியவை.

1. துக்கம்-உலகில் பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு எல்லாம் துன்பம்; நண்பர்களைப் பிரிதல், துன்பம்; அன் பற்றவர்களின் தொடர்பு துன்பம்; விரும்பியதைப் பெறாமை துன்பம்; ஐம்புலன்களின் வழியே அறிந்து ஆசை கொண்ட யாவும் துன்பத்திலேயே முடிகின்றன. துக்கத்திற்கு மூலகாரணம் பேதைமை, பேதைமையி லிருந்து செயல், செயலிலிருந்து உணர்வு உணர்வி லிருந்து உருவமும் அருவமும், இவைகளிலிருந்து உணர்ச்சிக்குரிய வாயில்கள், வாயில்களிலிருந்து ஊறு (ஸ்பரிசம்). இதிலிருந்து நுகர்வு, நுகர்விலிருந்துவேட்கை வேட்கையிலிருந்து பற்று, பற்றிலிருந்து கர்மத் தொகுதி, கர்மத்திலிருந்து பிறப்பு, பிறப்பிலிருந்து உபாதைகள் தோன் றுகின்றன.

2. துக்க காரணம்-சகல துக்கங்களுக்கும் காரணம் H i. o th y ஆசை அல்லது அவாதான். இதைத் திருஷ்ணை என்பர். -

3. துக்க நிவாரணம்-ஆசையை ஒழித்து அவித்து விடுதலே துக்கத்தை ஒழிக்கும் மருந்து.

4. துக்க நிவாரண மார்க்கம்-பரிசுத்தமான எட்டு உறுப்புக்களையுடைய அஷ்டாங்க மார்க்கமே துக் கத்தை நீக்கும்வழி. எட்டு அங்கங்களாவன: - 1. நற்காட்சி -ஸ்ம்மா திட்டி

2. நல்லூற்றம் -ஸ்ம்மா ஸங்கல் ட

3. நல்வாய்மை - ஸம்மா வாசா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/97&oldid=568711" இருந்து மீள்விக்கப்பட்டது