உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்ம பதம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுபந்தங்கள் ☐ 97


7. நற்கடைப்பிடி: கருத்துடைமை, உடலைப்பற்றியும் உணர்ச்சி பற்றியும், உள்ளத்தைப் பற்றியும், உலக இயற்கை பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து, ஆராய்ந்து உண்மையை உணர்ந்து அதை இடைவிடாது போற்றுதல். வனத்திலோ மரத்தடியிலோ, ஏகாந்தமான ஒரிடத்தில் அமர்ந்து ஒருவன், தன் உடலையும், பிறர் உடல்களையும் பற்றிச் சிந்தித்து, உண்மையை அறிய முடியும்; சுவாசப் பயிற்சி இதற்கு உதவியாம். இது போலவே உணர்ச்சி உள்ளம் இயற்கை பற்றியும் அறிந்து, ஆசை, கோபம், மடிமை, அமைதியின்மை, கவலை, சந்தேகம் முதலிய தடைகளை நீக்கவேண்டும். இவைகள் எப்படித் தோன்றுகின்றன என்பதைத் தெரிந்து அடக்கி வந்தால் பின்னால் இவை தோன்றாமலே ஒழிகின்றன . அறிவுள்ள பிராணிகள் யாவும் ஐந்து ஸ்கந்தங்களின் சேர்க்கையால் உண்டானவையாதலால், அவைகளைப் பற்றிச் சீடன் சிந்திக்க வேண்டும். உருவம், உணர்வு, அறிவு, சிந்தனை, விஞ்ஞானம் என்ற சைதந்ய உணர்ச்சி ஆகிய ஐந்து ஸ்கந்தங்களும் தோன்றி மறையும் இயல்பை அவன் உணர்வான். ஐம்புலன்களோடு மனத்தையும் சேர்த்து ஆறு புலன்களால் உண்டாகும்.ஆறு வகை உணர்வையும் அறிந்து, அவற்றின் சார்பால் பந்தம் தோன்றுவதைத் தெரிந்து கொள்வான் , பின்னர் உண்மையான ஞானத்தை அடைவதற்குரிய சாமர்த்தியம், ஞாபகம், மனனம், சாஸ்திர ஆராய்ச்சி, ஆனந்தம், சாந்தி, சமதிருஷ்டி ஆகிய ஏழு கருவிகளையும் பயன் படுத்திக் கொள்வான். இவைகளால் ஞானமும் விடுதலையும் சித்திக்கும்.

8. நல்லமைதி : உள்ளத்தை ஒரு நிலைப்படுத்தல், இதனால் உண்மையை அறிவதைத் தடுக்கும் ஆசை, துவேஷம் முதலிய ஐந்து தடைகளும் நீங்கி, இன்பமும் தியானமும் நிலைத்து நிற்கும்; உள்ளம் அமைதி பெறும்,

அ -7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/99&oldid=1360151" இலிருந்து மீள்விக்கப்பட்டது