பக்கம்:தயா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§off 'ஏ ஜயா, ஸ்பா, தயாவைக் கண்டேளோ?” 'இல்லையேம்மா' யதேச்சையாய் ஒரே சமயத்தில் ஒரே பதிலில் இரு குரல்களும் இரு ஸ்தாயியில் ஒருமித்தன. "நீங்கள் என்ன பண்ணறேள்?” "என்ன பண்ணனும்?” "அங்கே என்ன நடந்திண்டிருக்கு...?” எல்லாம் நடந்தாயிடுத்து.' அக்காவும் தங்கையும் ஒருவரை வொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் கண்களில் விஷமமும் ரகஸ்ய அர்த்தங்களும் தத்தித் தித்தித்தன, அப்படியா?” "ஆமாம். அப்படித்தான்! அம்மா இப்படித்தான் ஏதாவது அர்த்த மில்லாமல் கேட்டுக் கொண்டு தொணப்பிக் கொண்டிருப்பாள். வயதானதோடு வாத்தியார் பெண்டாட்டியில்லையா?” என்னடி சொல்றேள்?” ஸ்பா அருகே வந்து ஒவ்வொரு விரலாய் மடக்கினாள். இதைக் கேட்டுக்கோ. காலையிலே தாலி கட்டியாச்சா? இப்போ கதவைச் சாத்தியாச்சு. இனிமேல் ஒண்னும் பாக்கியில்லை.” "என்ன ஸ்ாபா. அவ்வளவு சுருக்க முடிச்சுட்டியே?’’ "பின்னே என்ன இன்னும் பாக்கி?” 'காலையில் கட்டுச் சாதக் கூடையும் கருவ.ாமும் இருக்கே!” 'இருக்கு. அதையும் வாங்கிண்டு நின்னா, இன்னுமா கிளம்பல்லேன் னு சவுக்கு உருண்டைக் கட்டையாலே கதையுமிருக்கு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/10&oldid=886211" இலிருந்து மீள்விக்கப்பட்டது