பக்கம்:தயா.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§4 த்யா 'பாலசந்த்ரா, உன் மன நிலையை நான் அறிவேன். நீ வருவதற்கு முன்னாலேயே சக்குவுக்குக் கல்யாணம் கூடியிருந்தால் உனக்கு இது தெரிய வேண்டிய அவசி யமேயிருந்திருக்காது. அப்படித்தான் நாங்கள் நினைக் சுண்டிருந்தோம். ஆனால் தக்க வரன் இதுவரை கிடைக்க வில்லை, உனக்காக, கையை விட்டுக் கழிஞ்சுதுன்னு கண்ட இடத்தில் தள்ளிவிட முடியுமா? இனி நீயும் சேர்ந்து உன் தங்கைக்கு நல்ல வரனாய்த் தேடனும், சாலாவுக்கு நம்மாலான கைம்மாறு இதுதான்,” சற்றுத் தயங்கி அசரீரி மறுபடியும் வருகின்றது. 'பாலசந்த்ரா, நீ இனிமேல் குழந்தையில்லை, இதெல்லாம் நீ தெரிஞ்சுக்க வேண்டியதுதான். முதல் முதலில் எனக்கு உன்போல்தானிருந்தது. ஆனால் அலை அடங்கினப்புறம் நியாயம் தெரியாமல் இல்லை. அர்ச் சுனன் போல ஆம்படையானுக்கு வியாதிக்காரப் பெண் டாட்டியா வாய்ச்சுட்டு எனக்குப் பேச வாய் என்ன இருக்கு? அதுவும் ஒருநாளா, ரெண்டு நாளா, என்னால் அவருக்கும் அயுசுக்கும் தண்டனையா? நாம் எல்லாரும் மனுஷாள்தானே! இது ஒண்ணு நீ புரிஞ்சுண்டால் போதும்.” - ருபதரிசனம் கிட்டிவிட்டால் போதாது. தரிசனத் தின் உறவும் புரிந்துகொள்ள வேண்டுமோ? அதற்குத்தான் நாம ரூபமோ? ரூபதரிசனத்தை நாமரூபத்தில் அடையவே நாம் ஜெயமோ? அம்மா குரல் அடங்கிவிட்டது. இதுவே அவளுக்கு அசதியாயிருக்கும், கீழே யிறங்கிப் போகிறேன். - எங்கே வந்திருக்கிறேன்? அப்பா, என்ன இருட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/100&oldid=886212" இலிருந்து மீள்விக்கப்பட்டது