பக்கம்:தயா.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§8 தியா களினின்று சிதறும் மழைத் துளிகள்போல். மார்மேல் சிரிப்பு கொட்டிற்று. முழுக் கண் திறந்து, மூக்கைக் குடைந்துகொண் டிருந்த புல்லைப் பிடுங்கியெறிந்தாள். 'இதென்ன விளையாட்டா?” ‘'நீ குறட்டைவிட்டே பாரு, என்னால் தாங்கவே முடியல்லே’ "நான் குறட்டை விடல்லே' பிடரியில் சினம் சிலிர்த்தது.

  • இல்லே விட்டே."

இல்லே விடல்லே, நான் துரங்கவேயில்லை, கண்ணை மூடிக்கிட்டிருந்தேன்.” - "நான் மூணு தரம் மூக்கில் விட்டப்பறம்தான். நீ அசைஞ்சு கொடுத்தே. இந்தப் புல் தரை அவ்வளவு ககமா என்ன?” "நீ உருண்டுட்டு வந்த மெத்தை இதன்கிட்ட என்ன பண்ணும்?” ‘'நீ சொல்றதும் சரிதான். இங்கே பூமியைத் தொட்டால், புலிக்குட்டியைத் தடவரமாதிரி. மெத்து மெத்துன்னு, பூமி மூச்சுவிடறமாதிரி, உள்ளங்கைக்கு உசிரோடு ஒரு மிதப்பு தெரியறது.” - "ராஜகுமாரி! புலிக் குட்டியைத் தடவினா ளாம்! ஹச!” 'நான் தடவியிருக்கேன். ஒரு தடவை ஜுவிலேநீ ஏன் இங்கே படுத்திருக்கே, உனக்கு வீடில்லையா?” - தன்னைச் சுற்றி அணைத்தாற்போல், அலட்சியமாய் ஒரு கையை வீசினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/104&oldid=886216" இலிருந்து மீள்விக்கப்பட்டது