பக்கம்:தயா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாணி 99 ஏன், இதெல்லாம் உனக்கு எப்படிப் படுது?

இத்தனையும் உன்னுதா?”

கண்ணை மூடியபடியே தலையை அசைத்தான். 'உனக்கு உன் ராஜ்யம், எனக்கு என் உலகம்.” நீ யார்?” நான் ராஜா.” 'ஒ' அதென்ன, வாயிலே கிளிப் பொந்து?”

ஒ'

"சரிதான், கொஞ்சம் லூஸ் போல இருக்குது”. அவள் கண்கள் அச்சத்தில் சுழன்றன, "என்னைப்பற்றி உனக்கு ஏற்கெனவே தெரியுமா?” 'உன்னைப்பற்றி எனக்கு இன்னும் என்ன தெரி யனும்?” - - அவள் பெருமூச்சின் கோடு நெஞ்சில் வீழ்ந்த இடத் தில் கீறல் விழுந்தது. விளையாட்டில் நேர்ந்துவிட்ட நகத்தின் பிராண்டல்போல் ஒரு வேதனை, எழுந்து متاسفا கார்ந்து கண்ணைக் கசக்கிக்கொண்டான். கண்ணைக் கசக் கியும் கலையாத கனவைக் கனவென்று நினைப்பதா, நனவென்று கொள்வதா? கிலியும் சோகமும் தனக்குப் புரியாதவொரு பக்கு வத்தில் சேர்ந்த விழி வார்ப்பில், திடீர் திடீரென முன் னுாறு வயதின் அலுப்புடன், முப்பது நாள் பச்சைக் குழந்தையின் விளக்குப் பார்வையும். மாறி மாறியும் இழைந்தும் மருள் காட்டுகையில் நெஞ்சை என்னவோ செய்தது; அச்சமாய்க்கூட இருந்தது. பயத்துக்கொரு தேவதை அது இதுபோல் தானிருக்குமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/105&oldid=886217" இலிருந்து மீள்விக்கப்பட்டது