பக்கம்:தயா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 திif: தன் தைரியத்துக்குக் கனைத்துக் கொண்டான். -நீ யார்?" p” "நீதான் சொன்னையே நான் ராஜகுமாரின்னு 'விளையாட்டிருக்கட்டும்.’’ - அவள் அவசரமாய் இடைமறித்தாள், ஏன். ஆப்படியே இருக்கட்டுமே! இதுவேதான் நிஜமாயிருக்கக் கூடாதா?” - "என்ன பெரிய பேச்செல்லாம் பேசறே. எனக்குப் புரியாத பேச்சு!” . நான் மாத்திரம் புரிஞ்சா பேசறேன்!” எங்கே வந்தே? எங்கே இருக்கே? வழி தப்பிப் போச்சா? பயப்படாதே. இடம் சொல்லு. கொண்டுபோய் விடறேன்." அவள் பதில் பேசவில்லை. தன் நகங்களைச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டாள். விரல்களுக்குக் கோப்பை வைத்தாற் போல் 'பாலிஷ்” ஏற்றிய நகங்கள், ஐந்து விரல்களையும் சேர்த்துப் பிடிக்கையில். ஐந்து வண்டுகளின் முதுகுகள் ஒன்று சேர்ந்தன! விழிமேல் தாழ்ந்த இமைகள். அமைதியில் அசை வொடுங்கின, எண்ணெய்க்குளி கண்டாற்போல் கூந்தல் சற்றே சீறிக்கொண்டு, அதன் அலைவாகில் அடங்காப்பிரிகள் கருஞ் ஜ்வாலைக்கென முகத்தைச் சூழ்ந்து, காற்றில் அலைகையில்- - இந்த முகம் காற்றிலே ஒரு தோற்றமா? நான் கையைத் தொட்டு அழிச்சால் கலைஞ்சு போயிடுமா? - நினைப்பா நெஞ்சில்தான் பதியும். எத்தனை நாழி பார்த்துக்கிட்டேயிருந்தாலும் கண்ணுக்கு நிச்சயமாகாதா? என் முழிப்பு நிஜமா இல்லை இந்த முகம் நிஜமா? யாரை நிமிண்டிப் பார்த்துக்கறது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/106&oldid=886218" இலிருந்து மீள்விக்கப்பட்டது