பக்கம்:தயா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தபா - - 5 'உருண்டைக் கட்டை எஞ்சியிருந்தால்?’’ இரு கெக் கேக்"கள் ஒரு க்றீச்'சில் கலந்தன.

"தயாவைக் காணோமே! ஏ தயா. தயா!'

'இதென்ன சவலை மாதிரி உன் கையொட்டிக் குழந்தையை மடியில் போட்டுத் தூங்கப் பண்ணனுமா?" "தயா, எங்கேடி போயிட்டே' மூலையில் வைத்த மண் தொட்டியினின்று எழுந்த பெரிய க்ரோட்டன்'ஸின் நிழலின் கீழிருந்து ஒரு பெருமூச்சு கிளம்பிற்று. இதென்ன, ஒரு ஆட்டை மடக்க மூணு புலியா? "ஏண்டி தயா, இருட்டில் என்ன பண்றே?” என்ன பண்ணுவா? ஏதாவது குருட்டுயோசனை தான். எங்களைப் போலவாளுக்கு இது மாதிரி சமயங்கள் தானே.” தயாவின் பார்வை ஜயாவின் மேல் தாழ்ந்து ஆழ்ந்தது. பாவம், ஜயா, தன்னைத்தான் நொந்து கொள்கிறாள்.

  • அப்பா! கால் விட்டுப் போறது!’ அம்மா உடம்பை மெதுவாய் இறக்கிக்கொண்டு படிக்கட்டில் உட்கார்ந்தாள். அம்மாவுக்குப் பாரி உடம்பு, - -

"அப்பாடா- எப்போப்பா வீடுபோய்ச் சேருவோம்னு இருக்கு.” 'பாவம், பிள்ளையாத்துச் சம்பந்தி, மங்கு மங்குன்னு காரியம் செஞ்சு களைச்சுப் போச்சாக்கும்." 'என் நாளிலே வேனது செஞ்சாச்சு. அதுக்கில்லே, இந்தப் பிராமணனுக்கு தையிலே நடக்கிற கல்யாணத் துக்கு வாழைக்காயைத் தவிர வேறே காய்கறி அகப் ப.லியா?” - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/11&oldid=886222" இலிருந்து மீள்விக்கப்பட்டது