பக்கம்:தயா.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணி 10? அந்த அடைப்பை அடைவதற்குள் வழியில் என்ன கூட்டம், குறுக்கே எத்தனை மேஜை நாற்காலிகள் முகங்கள் அவர்கள் பக்கம் திரும்புகையில், ஒரு பக்கம் லஜ்ஜை, ஒரு பக்கம் பெருமை, ஒரு பக்கம் வெறுப்பு. தெரியாத முகங்களுடன் தெரிந்த முகங்கள்.

  • ராஜா!' தோள் மேல் ஒரு முரட்டுப்பிடி விழுந்தது. . திரும்பினான். இந்தச் சமயம் இது பார்க்கப் பிடிக்காத முகம், . தோள் மேல் கையை உதற முயன்றான். ஆனால், பிடி பூணாய்க் கவ்விக் கொண்டிருந்தது.

“என்னடா அவசரம், கடிச்சா முளுங்கிடுவேன். எப்படா உனக்கு இந்த ஷோக் பிறந்திடிச்சு? ஆனால், போணி வகையான போணிதான்.” லேசாய் இருண்ட கண்ணுக்கெதிரே பாய்ந்த இருள் தூலங்கள் பவள நுரை கக்கின. “என்ன சொல்நே?' அவன் குரலின் அமைதி அவனுக்கே வியப்பாயிருந்தது. - 'என்ன ப்ரதர், எனக்கே ஜூல் காட்டறியே!” கண். அவனைக் காலிலிருந்து தலைவரை மேனோக்கி வெள்ளோட்டம் விட்டது. உடலை, எலும்பு வெள்ளை தெரியும்வரை கன்னா லேயே சுரண்டிவிடும்போல் கண், தோள்மேல் கையை மெதுவாய் விடுவித்துக் கொண்டான். தொப்புளில் ஏதோ சுருள் கழன்றது. அது ஊர்ந்து மேலேறி வருகையில், தொண்டை லேசாய்க் குமட்டிற்று. . - "இதென்ன கைபடாத ரோஜாவா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/113&oldid=886226" இலிருந்து மீள்விக்கப்பட்டது