பக்கம்:தயா.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲0፩ 蘇說Jr சொல்லி வாய் மூடவில்லை. வாய்மேல் விழுந்த அடி இடம் பூரா அதிர்ந்தது. கப்பென்று சப்தம் அடங்கிப் போன் திடீரே திக்கென்றது. அவனுக்கே நிச்சயமாய்ப் புரியவில்லை. அடி எப்படி நேர்ந்தது? நானா? அதுவும் இவனையா? இது நல்லத்துக்கா? அடி வயிறை வளையமா வில்லை போட்டுடுவானே! தடைபட்ட இரைச்சல் வெள்ளமாய் மீண்டு மேலே இறங்கிற்று. ஏன் இன்னும் ஒண்னும் நேரல்லே? வாயைத் துடைக் சிட்டு நிக்கறானே? இத்தோடு சரியா? வேளை பார்க்கறானா? இல்லே இதுவும் குரைக்கற நாய்தானா? சிரிக்கிறானா என்ன? நேரம் கொடுத்து நின்றும் ஒன்றும் நேரவில்லை,

    • ifrifflest,” - தடுப்புள் விர்ரென்று நுழைந்தான். அங்கிருந்த மணியைப் படபடவென்று தட்டினான், 'யாரங்கே?.

அய்யர் ஏ அய்யர்' வெளியிளிருந்து ஆள் ஒடி வரும் காலடி. அவள் முகத்தில் கலவரம் ஏதும் தெரியவில்லை. விழிகளில் மாத்திரம் ஒரு புது ஆழம். அவன் வெற்றியைத் தன் வெற்றியாய் ஆக்கிக்கொண்ட ஒரு சொந்தம், 'இதெல்லாம் நீன்னா நினைச்சிருக்கே? அட முட்டாளே, இத்தனையும் நான்னா! உன் மூல்மா நான். உனக்கு ரகைr. நான்.” வாய் பேசாமே மனம் பேசினால் இப்படித்தான் இருக்குமா? "ரrை'ன்னு இது என்ன புதுவார்த்தை என்னிலிருந்தே வருது? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/114&oldid=886227" இலிருந்து மீள்விக்கப்பட்டது