பக்கம்:தயா.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i l? தயா கவ்விக்குது பாரேன். அவள் குடிக்கறப்போ நெஞ்சங்குழி :பட் பட்டுன்னு அடிச்சுக்கறப்போ எனக்குத் தோணுது : எனக்கு ஒரு தங்கையிருந்தால் இப்படித்தான் சொல்லிக் கொடுப்பேனோ? நெஞ்சில் ஒரு ஏக்கம் தொட்டுட்டுப் போவுது. வழுக்கையை வழிச்சு வாயிலே போடறேன். குழந்தை யாட்டம் வாயை ஆ காட்டறா. இவள் இளநீரை எங்கே பாத்திருக்கப் போறா? எனக்கு உடம்பெல்லாம் இன்பம் பொங்குது, பொங்கி வரப்பவே துக்கமாக மாறுது, ஒரு பொம்மையிருக்குதே. ஆள் சிரிப்பான், தலைகீழாப் பிடிச்சா, அவனே அழுலான், அது மாதிரி. மனசுக்குள்ளே மாஜிக் ஏதோ நடக்குது. நடந்துகிட்டேயிருக்குது. - "ஏஞ்சாமி, நோட்டைக் கொடுத்துட்டு சில்லரை هو | வாங்காம போறையே "நீயே வெச்சுக்கோ ஆயா!' "நீங்க இப்ப இருக்காப்பலே எப்பவும் சந்தோசமா யிருக்கணும். உங்களுக்குப் பிறக்கறதும் உங்க மாதிரியே நல்ல குணமாயிருக்கணும்!” நான் அவளைப் பார்க்கிறேன், அவள் என்னைப் பார்க்கறா. எங்கள் சிரிப்பு, வாணமாட்டம் சீறிக்கிட்டு மேலே போவுது. . வர்ணிக்குடை இறங்குதான்னு பார்க்கறோம். நக்ஷத் திரம்தான் ஒண்ணொண்ணா, சரம் சரமா இறங்குது. மலைமேலே மாதா கோவில் மணியோசை விசி வருது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/118&oldid=886231" இலிருந்து மீள்விக்கப்பட்டது